[X] Close

தொடர்ந்து 2 ரஞ்சி இரட்டைச் சதங்கள்: தன்னை நீக்கிய டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்த மிலிந்த் குமார்


miland-kumar-centuries

  • kamadenu
  • Posted: 14 Nov, 2018 15:54 pm
  • அ+ அ-

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் அராஜகத் தேர்வு முறைகளினால் வெறுப்படைந்து நடப்பு ரஞ்சி சீசனில் சிக்கிம் அணிக்கு ஆடிவரும் மிலிந்த் குமார் இந்த சீசனில் தொடர்ச்சியாக 2 இரட்டைச் சதங்களை அடித்து டெல்லி கிரிக்கெட் தேர்வுக்குழுவுக்கு தன் மட்டை மூலம் பதிலளித்துள்ளார்.

இவர் செவ்வாயன்று நாகாலாந்து அணிக்கு எதிராக 224 ரன்கள் விளாசினார். 215 பந்துகளில் 31 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் இதில் அடங்கும்.

சீசனின் முதல் போட்டியில் மணிப்பூர் அணிக்கு எதிராக 261 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிலிந்த் குமார் ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்குக் கூறும்போது, “2 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக என்னை அணியிலிருந்து நீக்கியதால் மனம் உடைந்தேன். சில ஆண்டுகள் அணிக்காக ஆடிவரும் ஒரு வீரரை இப்படி நடத்துவது கூடாது. சீராகவும் ஆடியுள்ளேன். இரண்டு ஆட்டங்கள் ரன்கள் இல்லை, உடனே நீக்கம். இது எனக்கு பெரிய வருத்தமளிக்கிறது.

சிக்கிம் அணி இளம் அணி, எனக்குப் பொறுப்பு அதிகம் உள்ளது, இது எனக்குப் பிடித்திருக்கிறது” என்றார்

ஜூன் மாதம் மிலிந்த் குமார் தன் தாயை இழந்தார். ஒவ்வொரு போட்டியின் போதும் தன் தாயுடன் அனைத்து விஷயங்களையும் தொலைபேசியில் உரையாடும் பழக்கமுள்ளவர் மிலிந்த். ஆகவே தாய இழந்தது பெரும் சோகம் அவருக்கு.

இது குறித்து மிலிந்த் கூறும்போது, “நான் உண்மையில் உடைந்து போனேன், இனி என்ன என்பது பற்றி குழப்பமாக இருந்தது. ஒவ்வொரு இன்னிங்ஸ் முடிந்ததும் என்னுடன் தொலைபேசியில் அம்மா பேசுவார்.  இம்முறை நான் நன்றாக ஆடுகிறேன் ஆனால் அதைப்பார்க்க, அதனைப் பகிர்ந்து கொள்ள என் அம்மா இல்லை. இப்போது கடும் தியானப் பயிற்சியில் இருக்கிறேன்” என்றார் மிலிந்த் குமார்.

மிலிந்த் குமாரின் இந்த இரட்டைச் சதம் சிக்கிம் அணிக்கு 195 ரன்கள் முன்னிலையைப் பெற்றுத் தந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close