[X] Close

இணையதள திருமண தகவல் மையமான பாரத் மேட்ரிமோனி விளம்பர தூதராக தோனி நியமனம்


dhoni-bharat-matrimony

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 11:11 am
  • அ+ அ-

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் திருமண தகவல் மையமான பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல இந்திய கிரிக் கெட் வீரர் எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக எம்.எஸ்.தோனி கூறும்போது, “கடந்த 18 ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந் தெடுக்க உதவும் பணியில் பாரத் மேட்ரிமோனி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. லட்சக் கணக்கானோருக்கு மகிழ்ச்சி யான திருமண வாழ்க்கையை அளித்த இந்த நிறுவனத்துக்கு தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் முருகவேல் ஜானகிராமன் கூறும்போது, “பிரபல விளையாட்டு வீரருடன் இணைவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இவர் லட்சக்கணக்கான இளைஞர் களின் தூண்டுகோலாக இருக்கிறார். அதனால் பாரத் மேட்ரிமோனியின் விளம்பர தூதர் இடத்துக்கு இவர்தான் பொருத்தமானவர்.

இவர் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்றிருப்பதன் மூலமும், சிறந்த அப்பாவாகவும், அன்பு மிக்க கணவராக விளங்குவதன் மூலமும், அனைவரையும் கவர்ந்துள்ளார்” என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close