[X] Close

வெற்றிக்கான ரகசியம் என்ன?- மனம் திறக்கிறார் ரோஹித் சர்மா


rohit-sharma-interview

ரோஹித் சர்மா - படம்உதவி: ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 09:54 am
  • அ+ அ-

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழுமையாக 3-0 என வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி டி 20 ஆட்டத்தில் 182 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ஷிகர் தவண் 62 பந்துகளில், 2 சிக்ஸர் கள், 10 பவுண்டரிகளுடன் 92 ரன் களும், ரிஷப் பந்த் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளு டன் 58 ரன்களும் விளாசி அணி யின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். ஆட்டம் முடிவடைந் ததும் இந்திய அணியின் கேப் டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

அணியின் முன்னேற்றத்துக்கும், ஆஸ்திரேலிய தொடருக்கு முன்ன தாக வீரர்கள் ரன்கள் குவிப்பதும் முக்கியமானது. ஒருநாள் கிரிக் கெட் தொடரில் குறிப்பாக ஷிகர் தவணின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது.

ஆனால் அவரால் பெரிய அள வில் ரன்கள் குவிக்க முடியாமல் போனது. பெரிய அளவிலான தொடரை எதிர்நோக்கியுள்ள நிலை யில் ஷிகர் தவண், போட்டியை வென்று கொடுக்கக் கூடிய அளவி லான திறனை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ரிஷப் பந்தும் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தார். அதற்கான சரியான தரு ணமாக இந்த ஆட்டம் அமைந்தது. 6 ஓவர்களுக்குள் நாங்கள் இரு விக்கெட்களை இழந்தோம். இத னால் நெருக்கடி உருவானது. ஆனால் அதை சிறப்பாக கையாண்டு ஷிகர் தவணும், ரிஷப் பந்தும் வெற்றிக்கான பார்ட்னர் ஷிப்பை அமைத்தனர். அணியின் முன்னோக்கிய பார்வையில் இருந்து இவர்கள் இருவரும் ரன்கள் சேர்த்ததை முக்கியமாக கருதுகிறோம்.

ஆஸ்திரேலியா சென்று விளை யாடுவதும், சிறந்த திறனை வெளிப் படுத்துவதும் எப்போதுமே சவா லான விஷயம்தான். ஒவ்வொரு முறையும் நீங்கள் அங்கு செல்லும் போது, ஒரு வீரராகவும், ஒரு தனி நபராகவும், ஒரு குழுவாகவும் சோதிக்கப்படுகிறீர்கள். ஆஸ்தி ரேலியாவில் விளையாடுவது என்பது வித்தியாசமானதாகவே இருக்கும். இதுபோன்ற ஒரு தொடரை (மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடர்) நீங்கள் வெல்லும் போது, உங்களது நம்பிக்கை உயர்வடையும். இதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது.

இந்த செயல்திறனை நாங்கள் தொடரச் செய்ய வேண்டும். இது ஒரு முடிவில்லாத கதை. டி 20 தொடரில் நாங்கள் சிறப்பாக பீல்டிங் செய்தோம் என்றே கருது கிறேன். அந்த வகையில் மிக வும் மகிழ்ச்சியடைகிறேன். ஆஸ்தி ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இப்போதே சிந்திக்க வில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றே கருதுகிறேன். முதலில் அங்கு டி 20 தொடரில் விளையாடுகிறோம். இதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களிலும் கலந்து கொள்கிறோம்.

டி 20 தொடருக்கு பிறகு டெஸ்ட் தொடர் குறித்து சிந்திப்பதற்கு நமக்கு போதுமான நேரம் இருக் கும். நான் நிகழ்காலத்தில் இருக் கவே முயற்சி செய்கிறேன், அது தான் எனக்கு சரிவரும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நான் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கிறேன். ஆஸ்தி ரேலியா சென்று இந்திய அணிக் காக டெஸ்ட் போட்டியில் விளை யாடுவது என்பது சிறப்பான விஷயம். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை வென்றது. தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கான ரகசியம் குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “ஒவ்வொரு ஆட்டமும் புதிய ஆட்டம்தான். ஒவ்வொரு முறையும் மைதானத்துக்குள் செல்லும் போது என்னுடைய நோக்கங்களை எளிதானதாக வைத்துக் கொள்வேன். இந்த ஆட்டம் எளிமையானது, அதனால் அதை எளிய முறையில் வைத் திருக்க வேண்டும்” என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close