[X] Close

‘கோலி உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்’: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை


viswanathan-ananth-comment-about-virat-kohli

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 08:53 am
  • அ+ அ-

ரசிகர் தெரிவித்த கருத்துக்குப் பொறுமையாக இருக்காமல், கோலி உணர்ச்சிவசப்பட்டுவிட்டு, தன் கட்டுப்பாட்டை இழந்து பேசிவிட்டார் என்று செஸ் விளையாட்டில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிய ஆப்ஸ் வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு ரசிகர் பதிவிட்ட கருத்தில், ''விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதை ரசித்துப் பார்ப்பேன்'' என்று சாடியிருந்தார்.

அவருக்குப் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட விராட், ''இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை'' என்று கருத்து தெரிவித்தார்.

இந்தக் கருத்து ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் கிளப்பியது. விராட் கோலியை டிரால் செய்து மிகக்காட்டமான கருத்துகளைப் பதிவிட்டு இருந்தனர்.

கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியின் இடையே விஸ்வநாதன் ஆனந்த் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவரிடம் சமீபத்தில் ரசிகர் தெரிவித்த கருத்துக்கு விராட் கோலி கோபப்பட்டுப் பேசிய குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஆனந்த் அளித்த பதிலில் கூறியதாவது:

விராட் கோலி கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டுப் பேசி இருக்கிறார். என்னைக் கேட்டால், அந்த ரசிகர் கூறிய கருத்தை , மனதில் ஏற்றிக்கொண்டு அதன்பின் பொறுமையாக பேசி இருக்கலாம். அதுபோன்ற மனநிலைதான் அவருக்குச் சரியாக இருக்கும். விளையாட்டில் நாம் பல்வேறுபட்ட மனநிலை உடையவர்களை பார்க்கிறோம், ஆதலால், பொறுமையாக இருப்பது கோலிக்கு சரியாக இருக்கும்.

நான் நானாக இருக்கவே கடைசிவரை முயற்சிக்கிறேன். நீங்களும் சுயஅடையாளத்துடன் நீங்களாகவே இருப்பதுதான் உங்களுக்குச் சவுகரியமாக இருக்கும். விராட் கோலி இக்கட்டான தருணத்தில் சிக்கிவிட்டார். அதனால்தான் சிறிது உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அந்த நேரத்தில் அவர் நல்ல மனநிலையில் கூட இல்லாமல் இருக்கலாம். அதனால், கட்டுப்பாட்டை இழந்து பேசி இருக்கலாம், இது என்னுடைய கருத்து. எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது என்பது இயற்கைதான். இதில் நான்கூட உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன்.

மக்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான். எப்போதாதவது கட்டுப்பாட்டையும் இழந்துவிடுகிறார்கள். எனக்குக்கூட நடந்திருக்கிறது. தொடர்ந்து வெற்றிகளாக நான் பெறும்போது வெளிப்படாது. ஆனால், சிலநேரங்களில் உணர்வுகள் மேல் எழும்பிவிடும்.

விராட்கோலி பேசியது போதுமான அளவு விமர்சிக்கப்பட்டு முடிந்துவிட்டது. கோலியின் பேச்சைப் பிடிக்காதவர்கள், ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தால், மறுபடியும் பேசத் தேவையில்லை.

இவ்வாறு விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close