[X] Close

‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா?’: டிராவிட் கேள்வி


rahul-dravid-questions-indian-team

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 08:50 am
  • அ+ அ-

பிடிஐ

நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடினால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகிவிடுவார்களா என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸ்திரேலிய செல்லும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றிருக்கும் இந்திய வீரர்கள் சிலர், நியூசிலாந்துக்குச் சென்று, விளையாடும் இந்திய ஏ அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், நியூசிலாந்தில் மவுண்ட் மான்கானி நகரில் அந்நாட்டு ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமில்லாத டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி விளையாடுகிறது.

இந்த இந்திய ஏ அணியில் அஜின்கயே ரஹானே, ரோஹித் சர்மா, முரளி விஜய், பிரித்வி ஷா, பர்தீவ் படேல், ஹனுமா விஹாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து ஏ அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி முடிந்தவுடன் இவர்கள் 6 பேரும் ஆஸ்திரலியோ செல்வார்கள். முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இந்திய வீரர்கள் நியூசிலாந்தில் பயிற்சி எடுப்பது குறித்து இன்று கேள்வி எழுப்பப்பட்டது .அதற்கு அவர்  பிசிசிஐ தொலைக்காட்சிக்கு அளித்த பதிலில் கூறியதாவது:

இந்திய சீனியர் அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்திய ஏ அணியில் சில மூத்த வீரர்கள் இடம் பெற்று நியூசிலாந்து தொடருக்கு வருகிறார்கள். இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்குமேத் தவிர, நியூசிலாந்து ஏ அணியுடன் இவர்கள் 6 பேரும் விளையாடுவதால், மிகப்பெரிய அனுபவம் ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.

டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்தைப் பெறலாமேத் தவிர ஆஸ்திரேலியாவில் நிலவும் காலநிலை குறித்த அனுபவங்களைப் பெற முடியாது. ஏனென்றால், ஆஸ்திரேலியாவில் நிலவும் காலநிலையும், நியூசிலாந்து காலநிலையும் மிகவும் வேறுபாடானது. நியூசிலாந்து ஏ அணியுடன் விளையாடுவது கடும்போட்டியாக இருக்கும் என்பதால், நிச்சயம் அனுபவத்தைப் பெறுவார்கள். ஆனால், ஆஸி. தொடருக்குத் தயாராகிவிடுவார்கள் என்றெல்லாம் கூற முடியாது.

அதேசமயம், மூத்த வீரர்களுடன் ஏ அணி வீரர்கள் இணைந்து விளையாடுவதால் நல்ல அனுபவத்தைப் பெறுவார்கள். ஏனென்றால், இப்போதுள்ள சூழலில் பயிற்சி ஆட்டங்களில் விளையாட வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதிகமான கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால், சர்வதேச தொடருக்கு முன்பாக தயாராகிக் கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்கள் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை.

இந்திய கிரிக்கெட் கண்ணோட்டத்தில் இருந்து தொடர்களை உருவாக்குகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தொடருக்கு முன்பாக வீரர்கள் தங்களைத் தயார் செய்வதற்கு போதுமான பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவது அவசியம். இங்கிலாந்து தொடருக்கு முன் இதுபோன்ற தொடரை ஏற்பாடு செய்தார்கள், ஆனால், ஆஸ்திரேலியத் தொடருக்கு முன் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால், ஆஸ்திரேலியத் தொடர் முடிந்து நியூசிலாந்து செல்லும் போது இந்திய அணிக்கு நல்ல அனுபவமாக ஆஸ்திரேலியத் தொடர் அமையும்.

இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close