[X] Close

டேவிட் மில்லர் தன் அவுட்டுக்கு ரிவியூ கேட்டது முறையானதுதானா? தெ.ஆ. வெற்றியைத் தீர்மானித்த இன்னிங்ஸ் சர்ச்சையானது


david-miller

  • kamadenu
  • Posted: 12 Nov, 2018 12:03 pm
  • அ+ அ-

ஹோபார்ட்டில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் (125), டேவிட் மில்லர் (139) ஆகியோர் இணைந்து சாதனை 252 ரன்கள் கூட்டணி அமைக்க தென் ஆப்பிரிக்கா 55/3 என்ற நிலையிலிருந்து புத்தெழுச்சி பெற்று 321 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலக்கு நிர்ணயித்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஷான் மார்ஷின் சதத்துடன் 280/9 என்று தொடரை 2-1 என்று இழந்தது.

இதில் தென் ஆப்பிரிக்க வெற்றியத் தீர்மானித்த டேவிட் மில்லரின் இன்னிங்சிற்கு இடையே அவர் 41 ரன்களில் இருந்த போது கிளென் மேக்ஸ்வெல் பந்தில் எல்.பி.என்று நடுவர் அலீம் தாரால் தீர்ப்பளிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா என்று எதிர்முனை கேப்டன் டுபிளெசிஸ், மில்லர் இருவரும் கலந்தாலோசித்தனர், அப்போது ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தன் காலக்காட்டியை இயங்கச் செய்தது, மேல்முறையீடு 15 விநாடிகளுக்குள் கேட்கப்பட வேண்டும், ஆனால் 18 விநாடிகள் ஆனதாக சர்ச்சை எழுந்துள்ளது, ஆகவே கால அளவிலேயே விதிமீறல் நடந்துள்ளதாகத் தெரிகிறது .

இது மட்டுமல்ல, அவுட் தீர்ப்பளிக்கப்பட்ட பேட்ஸ்மேன் மட்டும்தான் ரிவியூ கேட்க முடியும், ஆனால் நேற்று முதலில் மில்லருக்காக கேப்டன் டுபிளெசிஸ் ரிவியூ கேட்டார், உடனேயே மில்லரும் ரிவியூ கேட்டார், ஆனால் அது முறையானதல்ல, கையை உயர்த்தி ஆங்கில லிபி டி வடிவத்தில்தான் சைகை செய்ய வேண்டும் ஆனால் மில்லர் வெறுமனே கையை மட்டும் தொட்டுக் காட்டினார், உண்மையில் நடுவர் 3ம் நடுவரை அழைக்க வேண்டிய தேவை இல்லை, காரணம், ரிவியூவுக்கான செய்கை அல்ல அது.

ஆனால் ரிவியூவில் மில்லர் தப்பினார். அலீம் தார் தன் அவுட் தீர்ப்பை நாட் அவுட் என்று மாற்ற வேண்டியதாயிற்று. இதனையடுத்தே மில்லர் அதிரடி 139 ரன்களை அடித்தார்.

உண்மையில் விதிப்படி மில்லர் ரிவியூ கேட்ட விதம் தவறு, பிறகு கால அவகாசம் 15 விநாடிகளைக் கடந்தது, மேலும் மில்லருக்காக கேப்டன் டுபிளெசிஸ் ரிவியூ கேட்டது, இவையெல்லாமே தவறுகள், கள நடுவர் ரிவியூவுக்கு ஒப்புக் கொள்ள வேண்டியத் தேவையில்லாதது.

இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சர்ச்சையாக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close