[X] Close

விராட் கோலி கொஞ்சம் ஓவர்தான்... தோனி கிரேட் லீடர், வின்னர்: ஸ்டீவ் வாஹ் கருத்து


virat-kohli-is-a-little-over-dhoni-great-leader-winner-steve-waugh

  • Team
  • Posted: 27 Feb, 2018 12:08 pm
  • அ+ அ-

நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷ நடத்தை கொஞ்சம் ஓவர்தான், ஆனால் அப்படித்தான் வளர முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார்.

தான் கேப்டனாக இருந்த காலத்தில் பொய் கூறியாவது டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும் என்ற ஸ்டீவ் வாஹின் கொள்கைகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் விதந்தோதி மகிழ்ந்தன. பிரையன் லாராவுக்கு தரையில் பட்டுக் கேட்ச் எடுத்து உண்மையான கேட்ச்தான் என்று சாதித்தார் ஸ்டீவ் வாஹ். இப்படியாக நிறைய சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.

எனக்கும் வெற்றி பிடிக்கும் ஆனால் வெல்வது நானாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது ஸ்டீவ் வாஹ் கொள்கை. விராட் கோலி இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை. அதனால் தான் ஸ்டீவ் வாஹ் , விராட் கோலியை பற்றிக் கூறும் போது ‘கொஞ்சம் ஓவர்தான் ஆனால் அப்படித்தான் வளர முடியும்’ என்கிறார்.

விராட் கோலிக்கும் வெற்றிதான் முக்கியம், ஆனால் அதற்கு ஸ்டீவ் வாஹ் ‘வழியை’ இதுவரை அவர் கடைபிடிக்கவில்லை. இந்நிலையில் மொனாகோவில் நடைபெற்ற லாரியஸ் உலக விளையாட்டு விருது நிகழ்ச்சிகளுக்கிடையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஸ்டீவ் வாஹ் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்கா தொடரை பார்த்தேன், அதில் விராட் கோலி கொஞ்சம் ஓவராகப் போய்விட்டார் என்றே கருதுகிறேன், ஆனால் ஒரு கேப்டனாக அது கற்றுக்கொள்ளும் காலக்கட்டம்

ஒரு கேட்பனாக அவர் இன்னமும் வளர்ந்து வருகிறார், சில வேளைகளில் அவர் உணர்வுகளை உள்ளிழுத்து கொள்வது நல்லது, ஆனால் அவர் அப்படித்தான் ஆடுகிறார்.

அணியில் உள்ள ஓவ்வொருவரும் இவரைப்போல உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராக இருக்க மாட்டார்கள் என்பதை இவர் உணர வேண்டும். ரஹானே, புஜாரா போன்றவர்கள் அமைதியானவர்களாக இருக்கிறார்கள், எனவே சில வீரர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை கோலி புரிந்து கொள்வது நல்லது.

சில வேளைகளில் ஆக்ரோஷத்தைக் கூட்ட வேண்டும், சில வேளைகளி ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இப்போதைக்கு அவரது தலைமைத்துவம் அபாரமாக உள்ளது. அவரிடம் ஆளுமையும் ஒரு விதமான எதேச்சையான திடீர் காரணிகளும் உள்ளன, அதனால் அவரையே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.

அனைத்து வடிவங்களிலும் வெற்றிச்சாதனைகளை கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி பெற்று வருகிறது. விராட் தன் அணியிடம் அதிக அளவில் எதிர்பார்க்கிறார், அனைத்து வடிவங்களிலும் நம்பர் 1 ஆக விளஙக் வேண்டும் என்று விரும்புகிறார், இதில் தவறில்லை, ஆனால் இது மிகக் கடினம்.

ஆஸ்திரேலியா தொடர்:

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாதான் வெற்றி பெற வாய்ப்பு, ஏனெனில் உள்நாட்டில் எல்லா அணிகளைப் போலவும் நாங்களும் சிறந்த ரெக்கார்டுகளை வைத்துள்ளோம். இந்தியாவில் இந்திய அணி எப்படியோ அப்படித்தான் நாங்களும் ஆஸ்திரேலியாவில். ஆனால் தன்னம்பிக்கை கொண்ட இளம் இந்திய அணி, மிகப்பெரிய தன்னம்பிக்கையுடனும் உணர்வுடனும் ஆடிவருகின்றனர், ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவோம் என்று இந்திய அணி நம்பலாம் அதில் சந்தேகமில்லை.

கடந்த காலங்களை விட இப்போதைய ஆஸ்திரேலிய பிட்ச்கள் பற்றி உள்ள படியே கூற வேண்டுமெனில் இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கும். முன்பு ஆஸ்திரேலிய பிட்ச்கள் பகைமை காட்டுவதில்லை, தற்போதைய ஆஸ்திரேலிய பிட்ச்கள் ‘அன்பு’ காட்டுவதாக உள்ளன.

எனவே இந்திய பேட்ஸ்மென்கள், ஸ்பின்னர்கள் நிச்சயம் கைகொடுப்பார்கள், மிகவும் போட்டி நிறைந்த ஒரு தொடராக அது அமையும்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தற்போது ஒரே தரத்தில் உள்ளன, இவர்கள் நம்பர் 1 இடத்துக்காக அடுத்த 2 ஆண்டுகளில் கடுமையாகப் போராடிக் கொள்வார்கள்.

தோனி பற்றி

தோனி ஒரு கிரேட் பிளேயர், அவரிடம் இப்போது இருக்கும் அதே தீப்பொறி, ஆற்றல் நீடிக்க வேண்டும், உலகக்கோப்பை வரை ஆடலாம், அதற்கே இன்னும் 12 மாதங்கள் என்ற நீண்ட காலம் உள்ளது. அவர் நன்றாக இருப்பது போல்தான் தெரிகிறது, ஆனால் வயதாகி வரும்போது சில சமயங்களில் தயாரிப்பில் சுணக்கம் ஏற்படும், ஆனால் இப்போது அவர் தன்னை தயார்படுத்திக் கொள்கிறார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவர் முனைப்பாக உள்ளார், அவர் கிரேட் லீடர், வின்னர்.

இவ்வாறு கூறினார் ஸ்டீவ் வாஹ்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close