[X] Close
 

ஐவர் பூப்பந்துப் போட்டியில் சென்னை அணிகள் வெற்றி


chennai-teams-win-in-the-quarterfinals

  • Team
  • Posted: 27 Feb, 2018 05:55 am
  • அ+ அ-

கரூர் மாவட்டம் புகளூரில் நடைபெற்ற டிஎன்பிஎல் ஐவர் பூப்பந்துப் போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னையை சேர்ந்த பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மாநில அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான ஐவர் பூப்பந்துப் போட்டிகள் கடந்த 24, 25-ம் தேதிகளில் காகித நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள பூப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது. ஆண்கள் போட்டிகள் லீக் மற்றும் சூப்பர் லீக் போட்டிகளாகவும், பெண்கள் போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் போட்டிகளாகவும் நடத்தப்பட்டன.

இதில் சேலம், சென்னை, திண்டுக்கல், கோவை, வேலூர், மதுரை, திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, பெரம்பலூர், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி, நாகர்கோவில், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடவர் பிரிவில் 45 அணிகளும், மகளிர் பிரிவில் 22 அணிகளும் பங்கேற்றன. போட்டிகளை முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி) ஆ.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். ஆடவர் பிரிவில் சென்னை செயின்ட் ஜோசப் தொழில்நுட்ப கல்லூரி அணியும், மகளிர் பிரிவில் மயிலாப்பூர் லேடி சிவசாமி கிளப் அணியும் முதலிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு செயல் இயக்குநர் கிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.

ஆடவர் பிரிவில் முதலிடம் பெற்ற சென்னை செயின்ட் ஜோசப் தொழில்நுட்ப கல்லூரி அணிக்கு ரூ.17,000, 2-ம் இடம் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் அணிக்கு ரூ.13,000, 3-ம் இடம் பெற்ற காஞ்சிபுரம் எஸ்ஆர்எம் குழும நிறுவனங்கள் அணிக்கு ரூ.9,000 பரிசு மற்றும் கோப்பை, 4-ம் இடம் பெற்ற சென்னை பிளஸ் பாய்ன்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிக்கு ரூ.6,000, 5-ம் இடம் பெற்ற கரூர் டிஎன்பிஎல் அணிக்கு ரூ.3,000 பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

மகளிர் பிரிவில் முதலிடம் பெற்ற மயிலாப்பூர் லேடி சிவசாமி கிளப் அணிக்கு ரூ.8,000, 2-ம் இடம் பெற்ற நாமக்கல் பாவை தொழில்நுட்ப கல்லூரி அணிக்கு ரூ.6.000 பரிசு மற்றும் கோப்பை, 3-ம் இடம் பெற்ற காஞ்சிபுரம் எஸ்ஆர்எம் குழும அணிக்கு ரூ.4,000, 4-ம் இடம் பெற்ற கோவை நிர்மலா கல்லூரி அணிக்கு ரூ.3,000 பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

சிறந்த வீரராக சென்னை பிளஸ் பாய்ன்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மகேஷூம், சிறந்த வீராங்கனையாக நாமக்கல் பாவை தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த கவுசல்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close