[X] Close
 

ஆவேசமாக வழியனுப்பியதற்கு வருத்தம்: இளம் வீரரிடம் மன்னிப்பு கோரிய அப்ரிடி - வைரலாகும் பதிவு


afridi-aplogy-viral-video

  • போத்திராஜ்
  • Posted: 12 Mar, 2018 21:19 pm
  • அ+ அ-

கராச்சி நகரில் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் இளம் வீரரை வெளியேற்றி ஆவேசமாக பேசிவிட்டு, பின் அவரிடம் மனம்திறந்து மூத்த வீரர் ஷாஹித் அப்ரிதி மன்னிப்பு கோரியது அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள் அந்தநாட்டில் நடந்து வருகிறது. இதில் கடந்த 10-ம் தேதி கராச்சி நகரில் கராச்சி கிங்க்ஸ் அணிக்கும், முல்தான் சுல்தான்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்தது. இதில் கராச்சி கிங்ஸ் அணிக்காக அப்ரிதி விளையாடி வருகிறார். இந்த போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 63 ரன்களில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் போட்டியின் இடையே முல்தான் சுல்தான் அணி வீரரும் 19வயதான சைப் பாதர் பேட்டிங் செய்தார், அவருக்கு சாஹித் அப்ரிதி பந்துவீசினார். அப்ரிதி வீசிய 3-வது பந்தில் பாதர் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அப்போது, ஆத்திரத்துடன் பேட்ஸ்மேன் பாதரை நோக்கி சத்தமிட்ட அப்ரிதி, ஓய்வு அறையை சுட்டிக்காட்டி வெளியேறு என்றவாறு கூறினார். மூத்த வீரர் அப்ரிதியிடம் இருந்து இந்த செயலை எதிர்பாராத பாதர் சில வினாடிகள் களத்திலேயே அப்பிரிடியை பார்த்துவிட்டு சென்றார்.

அதன்பின் போட்டி முடிந்தபின் தனது ட்விட்டர் பக்கத்தில் பாதர் ஒரு கருத்து பதிவிட்டு இருந்தார். அதில், ‘அப்ரிதி நீங்கள் கோபப்பட்டாலும் இப்போதும் உங்களை விரும்புகறோம். நீங்கள்தான் எங்கள் தலைவர்’ என்று தெரிவித்திருந்தார்.

இதைப் பார்த்த அப்ரிதி பதிலுக்கு ட்விட் செய்திருந்தார். அதில் ‘ என்னை மன்னித்துவிடு என் ஜூனியர். அந்த நேரத்தில் நடந்தவை எல்லாம் விளையாட்டாக நினைத்துக்கொள். நான் எப்போதுமே எனது ஜூனியர் வீரர்களை விரும்புகிறேன். குட்லக்’ எனத் தெரிவித்தார்.

ஷாஹித் அப்ரிதியின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டைப் பெற்று, அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close