[X] Close
 

முத்தரப்பு டி20 தொடர்: இந்தியாவை வென்றது இலங்கை 


t20-tri-series-srilanka-beats-india

  • Team
  • Posted: 07 Mar, 2018 00:15 am
  • அ+ அ-

கொழும்பு நகரில் நடைபெற்ற நிதாஹஸ் டி20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7 டி20 போட்டிகளில் தோல்வியுற்றதை இலங்கை முடிவுக்குக் கொண்டுவந்தது.

டாஸ் வென்ற இலங்கை முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்து, 174/5 என்று கட்டுப்படுத்டியது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி குசல் பெரேராவின் அதிரடியால் 18.3 ஓவர்களில் 175/5 என்று வெற்றி பெற்றது.

உனாட்கட்டுடன் தொடக்கத்தில் வீசிய தமிழக வீரர், ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களில் மெண்டிஸை பெவிலியன் அனுப்ப களமிறங்கினார் குசல் பெரேரா. இறங்கிய உடனேயே வாஷிங்டன் சுந்தர் பந்தை சிக்சருக்குத் தூக்கினார்.

இன்னிங்சின் 3வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். முதல் 2 பந்துகள் 2 ஷார்ட் பிட்ச் ஒன்று லெக் திசை பவுண்டரிக்கும் ஒன்று ஆஃப் திசை பவுண்டரிக்கும் பறந்தது. அடுத்த பந்து கவர் சைடிலி மின்னல் வேகத்தில் பவுண்டரிக்குப் பறந்தது. அடுத்த பந்து வேகம் குறைக்கப்பட்ட மெதுவான பந்து. பெரேரா நன்றாக நின்று கவர், மிட் ஆஃபுக்கு இடையில் சிக்சருக்குப் பறக்க விட்டார். 

அடுத்த பந்தை இடுப்புக்கு மேலே ஃபுல்டாஸாக வீச அது நோபால் ஆனதோடு பவுண்டரிக்கும் சென்றது. 6 பந்துகளில் ஒரு சிக்ஸ் உட்பட 6 பவுண்டரிகள். கடைசி பந்து நல்ல வேளையாக ஷார்ட் பைன் லெக்கில் பீல்ட் செய்யப்பட்டது ரன் இல்லை. ஒரே ஒவரில் 27 ரன்கள். ஆட்டம் மொத்தமாக இலங்கைக்கு சாதகமானது. 
குணதிலக வாஷிங்டன் சுந்தரையும் ஜெய்தவே உனாட்கட்டையும் 2 சிக்சர்களுக்குத் தூக்கி கடைசியில் 19 ரன்களில் உனாட்கட் வீச்சில் வெளியேறினார். 6வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களையே கொடுக்க பவர் பிளே முடிவில் இலங்கை 75/2 அதிரடித் தொடக்கம் கண்டது. 

சாஹல் வந்தவுடன் குசால் பெரேரா இறங்கி வந்து ஒரு சிக்ஸ் அடித்தார். விஜய் சங்கர் முதல் ஓவரை அருமையாக வீசினார். 4 ரன்களே வந்த ஓவரில் 22 பந்துகளில் குசால் பெரேரா அரைசதம் கண்டார். சாஹல் பந்தை மேலேறி வந்து பவுண்டரி அடித்த சந்திமால் அதே ஓவரில் பவுல்டு ஆனார். 

இன்னிங்ஸின் 13வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச முதல் 3 பந்துகளுமே அருமையாக பந்தாக அமைய குசல் பெரேராவால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை, அழுத்தம் அதிகாமாக சுந்தர் ஒரு பந்தை நன்றாக தூக்கி மெதுவாக வீசினார், இறங்கி வந்து ஆட முயன்ற குசல் பெரேராவினால் பந்தைத் தொட முடியவில்லை கார்த்திக் ஸ்டம்பிங் செய்தார். குசல் பெரேரா 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இது ஒரு  சின்ன திருப்பு முனையாக அமைந்ததோடு இந்திய அணிக்கு சிறிய வெற்றி வாய்ப்பையும் ஏற்படுத்தியது. முதல் ஓவரி 27 ரன்கள் வாரி வழங்கிய தாக்குர் மீண்டும் பந்து வீச வந்த போது தரங்கா கொடுத்த கேட்சை ரிஷப் பந்த் நழுவவிட்டார். ஆனால் இது கடினமான வாய்ப்பு பந்த் தன்னால் இயன்றவரை எம்பி முயற்சி செய்தார் என்றுதான் கூற வேண்டும்.

11.2 ஆவது ஓவரில் அடித்த சிக்சருக்குப் பிறகு 17வது ஓவர் வரை பவுண்டரியே இல்லை. ஆனாலும் பெரிய அச்சுறுத்தல் இல்லை. தரங்கா 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த பிறகு சாஹலிடம் பவுல்டு ஆனார்.

இறுதிக்கட்டத்தில் 18 பந்துகள், 24 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது உனாட்கட் வீச வந்தார். அதுவரை தட்டுத்தடவி வந்த ஷனகா பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார். பிறகு திசர பெரேரா பேட்டிங் முனைக்கு வர ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என விளாசினார். 
18வது ஓவரின் 3வது பந்து டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு திசரா பெரேராவால் விரட்டப்பட இதுதான் வெற்றி ஷாட்டாக அமைந்தது. ஷனகா 15 ரன்களுடனும் பெரேரா 10 பந்துகளில் 22 ரன்களுடனும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். பெரேரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close