[X] Close

விம்பிள்டனில் பட்டம் வென்றார் சிமோனா ஹாலப்; மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்யும் செரீனாவின் கனவு கலைந்தது


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 08:27 am
  • அ+ அ-

 மகளிர் ஒற்றையர் பிரிவில் முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தார் ருமேனியாவின் சிமோனா ஹாலப்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ் வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர்லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் நேற்று7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், 11-ம் நிலை வீராங்கனையும் 7 முறை சாம்பியனுமான அமெரிக்காவின்செரீனா வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிமோனா ஹாலப்  6-2, 6-2 என்றநேர் செட்டில் எளிதாக செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கோப்பையை கைப்பற்றுவதற்கு சிமோனா ஹாலப்புக்கு 56நிமிடங்கள் மட்டுமே தேவையாக இருந்தது.விம்பிள்டன் தொடரில் சிமோனா ஹாலப் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறை. மேலும் விம்பிள்டனில் மகுடம் சூடிய முதல் ருமேனியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் 27 வயதான சிமோனா ஹாலப்.

அதேவேளையில் இறுதி ஆட்டத்தில்தோல்வியடைந்ததன் மூலம், 24 பட்டங்கள் வென்றுள்ள ஆஸ்திரேலியாவின் மார்கரெட்கோர்ட்டின் சாதனையை சமன் செய்யும்முனைப்பில் இருந்த செரீனா வில்லிம்ஸின்கனவு மீண்டும் ஒரு முறை கலைந்துள்ளது. 37 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் மோதுகிறார்.

சாம்பியன் பட்டம் வென்ற சிமோனா ஹாலப் கூறுகையில், “நான் 10 வயதில் இருந்தபோது என் அம்மா, நான் டென்னிஸில் ஏதாவது செய்ய விரும்பினால் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்று கூறினார். தற்போது இறுதிப் போட்டியில் பட்டம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close