[X] Close

இந்த உலகக்கோப்பையில் மிகவும் இக்கட்டான தருணங்களிலெல்லாம் மோசமாக ஆடினோம்: ஆஸி. அணி குறித்து ரிக்கி பாண்டிங் விளாசல்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 20:15 pm
  • அ+ அ-

-பிடிஐ

2019 உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் ஆஸ்திரேலியா முதல் முறையாக வெளியேறியது, இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும்போது, மிகவும் இக்கட்டான தருணங்களில் மோசமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்று சாடியுள்ளார்.

 

அரையிறுதியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை ஊதியது என்றுதான் கூற வேண்டும், பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஆஸ்திரேலியா சொதப்புவது மிகவும் அரிதானதே.

 

இந்நிலையில் இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறும்போது, “உலகக்கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணிக்கு பழக்கமில்லாத முறையில், இக்கட்டான தருணங்களிலெல்லாம் இந்த உலகக்கோப்பையில் படுமோசமாக ஆடினோம். 

 

இந்த ஒரு விஷயம்தான் அதிகம் பேசப்படுவதாக அமைந்தது, இதற்கு ஏதாவது காரணம் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

 

உத்தி ரீதியாகவும் நாங்கள் சரியாகத்தான் இருந்தோம், வீரர்கள் எனும்போது, சிறந்த அணியையே ஒவ்வொரு போட்டிக்கும் தேர்வு செய்தோம்.

 

இதில் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் என்னவெனில் இந்த வெற்றி, உத்வேகன் அனைத்தையும் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்கும் கடத்தும் என்பதே. ஆம் இந்த உலகக்கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து நாடே ஒரு அலையெழுச்சியைப் பார்க்கும், வீரர்களும் உச்சத்தில் இருப்பார்கள்.

 

ஆனால் யாருக்குத் தெரியும் உலகக்கோப்பையை வெல்லவில்லை எனில் அதன் மோசமான தாக்கம் ஆஷஸ் தொடரிலும் இருக்க வாய்ப்புண்டு.  ஆனால் உலகக்கோப்பையை வென்று விட்டால் இங்கிலாந்து அணி இதிலிருந்து நிறைய நம்பிக்கைகளை ஆஷஸ் தொடருக்கும் கடத்தும் என்பது உறுதி.

 

இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close