[X] Close

2015-ம் ஆண்டு ஏமாற்றத்துக்குப் பிறகு இறுதி சுற்றில் நுழைவோம் என நினைக்கவில்லை: இங்கிலாந்து கேப்டன் உருக்கம்


2015

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 09:00 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொட ரில் 1992-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக தற்போதுதான் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்தி ரேலிய அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியிருந்தது இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.

27 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் நுழைந்துள் ளது குறித்து இயன் மோர்கன் கூறியதாவது: 2015-ம் ஆண்டு தொடரில் முதல் சுற்றுடன் வெளி யேறிய பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி சுற்றில் நுழைவோம் என கற்பனை கூடசெய்தது இல்லை. அணியின் தன்மையை மாற்றம் செய்வதற் கான வழிமுறைகளை 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தொடங் கினோம். அந்த உலகக் கோப்பை தொடரில் சிறந்த அணி களிடமும், கீழ்மட்ட நிலையில் இருந்த அணிகளிமும் போராடி னோம். அதன்பின்னர் எங்களுக் கான குறிக்கோளை வகுத்துக் கொண்டோம். நாங்கள் விளை யாடிய விதத்திலும்,50 ஓவர் கிரிக் கெட் போட்டியை அணுகிய விதத் திலும் மாற்றங்களை கொண்டு வந்தோம். இதுஎங்களுக்கு சிறப்பாக கைகொடுத்தது.

ஆஸ்திரேலிய அணி தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் பலரை உள்ளடக்கியபடி வலு வானதாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க் இந்தத் தொடர் முழு வதுமே சிறப்பாக செயல்பட்டிருந் தார். இருப்பினும் சூழ்நிலைகளை எங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டோம். பேட்டிங் குக்கு சாதகமான ஆடுகளத்தில் நன்றாக பேட் செய்தோம். ஆடு களம் எங்களுக்கு பொருத்தமாக அமைந்திருந்தது.

முன்னதாக எங்களது பந்து வீச்சுகுழு சிறப்பாக செயல்பட் டிருந்தது. ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் காரேசிறப்பாக செயல்பட்ட போதிலும், அவர்களை வெளி யேற்றுவதற்கான வழிகளை கண் டறிந்து கொண்டோம். களத்தில் எங்களது திட்டங்களுக்கு பலன் கிடைத்தது.

இறுதிப் போட்டி நடைபெறும் ஞாயிற்றுக் கிழமை வெட்கப்பட வேண்டிய நாள் அல்ல என்றே நினைக்கிறேன். அன்றைய நாளா னது அரை இறுதி ஆட்டம் போன்று எதிர்நோக்கக்கூடிய தினம். இறுதிப் போட்டியில் விளையாடு வதற்கான வாய்ப்பை நாங்கள் உரு வாக்கியுள்ளோம். செயல் திறன் வாரியாக மீண்டும் நாங்கள் அனைத்தும் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால் போட்டியை அனுபவித்து விளையாட வேண்டும்.

இந்தியா - நியூஸிலாந்து அணி கள் இடையிலான அரை இறுதி ஆட்டத்தை நாங்கள் பயிற்சிக்கு செல்லும் வரை பார்த்தேன். கிரிக் கெட்டின் சிறந்த ஆட்டம் அது. நியூஸிலாந்து வீரர்கள் அற்புத மாக பந்து வீசினார்கள். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டனர். நியூஸிலாந்து அணி இந்தத் தொடர் முழுவதுமே வீழ்த்துவதற்கு கடினமான அணி யாக திகழ்ந்து வருகிறது என்றே நினைக்கிறேன். லீக் சுற்றிலும் சிறப்பாக விளையாடினார்கள்.

அரையிறுதியில் நியூஸிலாந் தின் செயல்திறன் அநேகமாக இந்தத் தொடரில் அந்த அணியின் சிறந்த ஆட்டமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இறுதிப் போட்டியில் வீழ்த்துவதற்கு நியூஸி லாந்து அணி கடினமான இருப்பார் கள். நாங்கள் அதை எதிர் நோக்குகிறோம். இவ்வாறு இயன் மோர்கன் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close