[X] Close

படுமோசமாக விளையாடி விட்டோம்: ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் வருத்தம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 09:02 am
  • அ+ அ-

கடந்த 12 மாதங்களில் ஆஸ் திரேலிய அணியின் முன்னேற்றம் நம்ப முடியாத வகையில் இருந் ததை நினைத்து பெருமைப் படுவதாகவும், அதேவேளையில் உலகக் கோப்பை அரை இறுதி யில் இங்கிலாந்துக்கு எதிராக மோச மான செயல் திறனை வெளிப் படுத்தியதையும் கேப்டன் ஆரோன் பின்ச் ஒப்புக்கொண்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் டில் 5 முறை சாம்பியனான ஆஸ் திரேலிய அணி இம்முறை கோப் பையை தக்கவைத்துக் கொள்வ தில் தேர்ச்சி பெறத் தவறியது. பர்மிங்காமில் நேற்று முன் தினம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தி யாசத்தில் தோல்வியடைந்த ஆஸ் திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது. குறைந்த அள விலான இலக்கை (224) கொடுத்த ஆஸ்திரேலிய அணி அதனை பாதுகாக்கத் தவறியது.

தோல்வி குறித்து அந்த அணி யின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறு கையில், “கடந்த 12 மாதங்களில் ஒரு அணியாக நாங்கள் அதிக அளவிலான முன்னேற்றம் கண் டுள்ளோம் என்றே நினைக்கிறேன். எவ்வளவு தூரம் நாங்கள் பயணித்து வந்துள்ளோம் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

எவ்வாறாயினும் நாங்கள் இங்கு வெற்றி பெறவே வந்தோம். ஆனால் இப்படியொரு வகையில் தொடரை முடித்ததில் ஏமாற்றம் அடைகிறேன். அரை இறுதியில் மோசமான செயல்திறனை வெளிப் படுத்திவிட்டோம். முதல் 10 ஓவர்கள் ஆட்டத்தை மாற்றிவிட் டது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சால் சேதம் அடைந்தோம். எங்களை விட இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியது.

14 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் (85), அலெக்ஸ் காரே (46) சிறப்பாக செயல்பட்டு எங்களை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இங்கிலாந்து பேட்டிங்கில் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என்பது எங் களுக்கு தெரியும். ஜேசன் ராய் இதுபோன்ற வகையில் விளை யாடும் போது எதிரணிக்கு பாதிப் பையே ஏற்படுத்துவார்” என்றார்.

இறுதி ஆட்டம் குறித்து பின்ச் கூறுகையில்,“ நியூஸிலாந்து அணி ஒருபோதும் போராடுவதில் இருந்து விலகியது இல்லை. இங் கிலாந்து அணி அதிக ஆற்றல் மற்றும் அதிக ஆபத்துள்ள விளை யாட்டை விளையாடுகிறது. இத னால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கூறுவது கடினம்” என்றார். - பிடிஐஎவ்வளவு தூரம் நாங்கள் பயணித்து வந்துள்ளோம் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close