[X] Close

2-வது அரை இறுதியில் இன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதல்


2

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:36 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று பர்மிங்ஹாமில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த உலகக் கோப்பையை இங்கிலாந்து நடத்துவதால் அந்த அணி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஒரு நாள் போட்டிகளில் அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 1979, 1987, 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை.

அந்த நீண்ட நாள் கனவை நனவாக் கும் முயற்சியில் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளது. பேட்டிங்கில் கேப்டன் இயன் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தக்கூடும். அதைப் போலவே பவுலிங்கில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஆதில் ரஷித் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

dfdsgf.JPG 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவும் மோதிய கடைசி 12 ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து 10-ல் வென்றுள்ளது. இது அந்த அணிக்கு சாதகமான ஒன்றாக உள்ளது.

அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கும் விதத்தில் ஆஸ் திரேலியா களமிறங்குகிறது. 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை முதல் அந்த அணி தொடர்ச்சியாக அரை இறுதியில் வெற்றி பெற்று வருகிறது. இதுவரை ஒரு அரை இறுதியில் கூட ஆஸ்தி ரேலியா தோற்றதில்லை. பேட்டிங்கில் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி வருகிறார். அவரிடமிருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக் கூடும். கேப்டன் ஆரோன் பின்ச், அலெக்ஸ் கேரே, மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டாய்னிஸ் ஆகியோர் அணிக்கு வலு வான தூண்களாக உள்ளனர். பவுலிங் கில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஸ்டாய்னிஸ், பெஹ்ரன்டார்ப் ஆகியோர் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர்.

அணி விவரம்:

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), பெஹ்ரன்டார்ப், அலெக்ஸ் கேரே, நாதன் கவுல்ட்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஹேண்ட்ஸ்காம்ப், நாதன் லயன், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஸ்டாய் னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸம்பா.

இங்கிலாந்து: இயன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், டாம் கர்ரன், லியாம் டாவ்சன், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

eng.JPG 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close