[X] Close

45 நிமிட மோசமான கிரிக்கெட் நம்மை தொடரை விட்டு வெளியேற்றியது: விராட் கோலி ஏமாற்றம்


45

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 21:38 pm
  • அ+ அ-

மான்செஸ்டரில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி போராடி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேற நியூஸிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

5 ரன்களுக்கு 3 விக்கெட், 24 ரன்களுக்கு 4 விக்கெட், பிறகு 92/6 என்று இந்திய அணி சரிவு கண்டது.

 

தோனி, ஜடேஜா மகா கூட்டணி அமைத்து 92/6 என்ற தோல்வியின் பிடியிலிருந்து வெளியேற்றி 208 வரை ஸ்கோரை உயர்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர், ஆனால் தேவைப்படும் ரன் விகிதம் எகிற நியூஸிலாந்தும் நிதானமாக வீசியதோடு, பீல்டிங்கிலும் அசத்த ஜடேஜா முதலில் வெளியேற பிறகு தோனி 50 ரன்களில் ரன் அவுட் ஆனது இந்திய துயரத்துக்கு வழி வகுத்தது.

 

இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறியதாவது:

 

மிகவும் கடினமே. ஒரு 45 நிமிட மோசமான கிரிக்கெட் ஆட்டத்தினால் தொடரிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நியூஸிலாந்து வெற்றிக்குத் தகுதியான அணியே. எங்களை அவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாக்கி, முக்கியத் தருணங்களிலும் நன்றாக ஆடி மீண்டனர்.

 

நம் ஷாட் தேர்வு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். மற்றபடி நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம், நாம் விளையாடிய விதம் குறித்து பெருமையே அடைகிறேன்.

 

நாக் அவுட் சுற்றுக்கு வந்த பிறகே அதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நியூஸிலாந்து அணி நல்ல அமைதியுடன் திட்டமிட்டு ஆடினர். அவர்கள் தைரியமாக ஆடினர், இறுதிப்போட்டிக்குச் செல்ல அந்த அணிக்குத்தான் தகுதி உள்ளது.

 

இன்று காலை களம் புகுந்தவுடன் எங்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்தோம். எந்த ஒரு பிட்சிலும் சேஸ் செய்யக் கூடிய ரன் எண்ணிக்கைக்கு அவர்களை மட்டுப்படுத்தியதாகவே கருதுகிறேன். ஆனால் முதல் அரைமணி நேரம் நியூஸி. பவுலிங் இந்த ஆட்டத்தின் வித்தியாசமாகும்.

 

நேற்றைய தினம் அருமை, இன்று காலை கூட நல்ல உத்வேகம் இருந்தது. ஆனால் நியூஸிலாந்து அணியின் ஆட்டத்துக்கு உரிய பாராட்டுதலைச் சேர்ப்பிக்க வேண்டும், பந்துகளை நன்றாக ஸ்விங் செய்தனர். மிகவும் தனித்துவமான திறமையுடன் அவர்கள் வீசி எங்களுக்கு ஆட்டத்தை கடினமாக்கினர்.

 

ஜட்டு இரண்டு அபாரமான ஆட்டங்களை ஆடினார், தோனி அவருடன் சேர்ந்து நன்றாகச் சென்று கொண்டிருந்தது, தோனி ரன் அவுட் ஆகிவிட்டார்.

 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close