[X] Close

நான் சொல்வதை சச்சின் கேட்க மாட்டார்.. ஹர்பஜன் தான் சொல்பேச்சு கேட்பார்: கங்குலி கலகல பேச்சு


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 15:21 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

என்னுடைய அணியில் ஏராளமான ஜென்டில்மேன்கள் இருந்ததால் எதிரணியை ஸ்ட்லெட்ஜிங் செய்வது இயலாததாக இருந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தாதா என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி துணிச்சலானவர். 2000ம் ஆண்டில் இருந்து 2005-ம் ஆண்டுவரை இந்திய அணியின் தோற்றத்தை மற்றி சர்வதேச அரங்கில் மிரள வைத்தவர். ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து உருவாக்கியவர் கங்குலி.

அணியை வழிநடத்துவதில், பேட்டிங்கிலும் உதாரணமாக இருந்தவர். அதேசமயம், எதிரணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ஸ்லெட்ஜிங் செய்வதும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருந்தது.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றைய உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் மழையால் தடைபட்டது. வர்ணனையாளராக இருந்த கங்குலியிடம் உங்களுடைய கேப்டன்ஷிப் காலத்தில் ஸ்லெட்ஜிங் இருந்ததா என்று சக வர்ணனையாளர் கேட்டார்.

அதற்கு கங்குலி சிரித்துக்கொண்டே மிகவும் கிண்டலுடன் கூறியதாவது:

நான் கேப்டன்ஷிப்பில் இருக்கும்போது அணியில் இருந்த வீரர்களை வைத்து ஏதேனும் ஸ்லெட்ஜிங் செய்வது ரொம்ப கஷ்டம். ஏனென்றால் அணியில் "ஏராளமான ஜென்டில்மேன்கள்" இருந்தார்கள்.

ராகுல் திராவிட்டிடம் சென்று எதிரணி வீரர்களை ஏதேனும் "ஸ்லெட்ஜிங்" செய்யச் சொல்லிக் கேட்டால், அவர் என்னிடம் திரும்பவந்து, அய்யோ, அப்படியெல்லாம் செய்யக்கூடாது, அது சரியான வழியில் விளையாடுவது அல்ல என்று சொல்வார்.

ind.jpg 

வி.வி.எஸ்.லக்ஸ்மனிடம் சென்று கேட்டால், நான் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லிவிடுவார். சச்சினிடம் சென்று "ஸ்லெட்ஜிங்" பற்றிக் கேட்டால், சச்சின் தன்னால் முடியாது என்று கூறிவிட்டு, மிட் விக்கெட்டில் நிற்கும் பீல்டரிடம் சொல்லி ஸ்டீவ் வாஹை "ஸ்லெட்ஜிங்" செய்யக் கூறுங்கள் என்று ஒதுங்கிவிடுவார்.

ஆனால், என்னுடைய பேச்சை கேட்கும் ஒரே வீரர் ஹர்பஜன் சிங் மட்டும்தான். சர்தார்ஜி நான் என்ன சொன்னாலும் செய்துவிடுவார்.

இவ்வாறு கங்குலி கிண்டலாகத் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close