[X] Close

இங்கிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆடினால் கடவுள் நம் ஓய்வறையில் இருப்பார்: ரவி சாஸ்திரி நம்பிக்கை


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 21:07 pm
  • அ+ அ-

-பிடிஐ

ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் லீக் சுற்றில் இங்கிலாந்துடன் இந்திய அணி தோற்ற அன்று இங்கிலாந்து ஓய்வறையில் கடவுள் இருந்தார், ஒருவேளை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தால் கடவுள் நம் ஓய்வறையில் இருப்பார் என்று நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோவில் ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது:

 

அந்த நாள் இங்கிலாந்தின் ஓய்வறையில் கடவுள் அமர்ந்திருந்தார் என்று கருதுகிறேன், அடுத்ததாக இங்கிலாந்தை இறுதிப் போட்டியில் சந்திக்க நேர்ந்தால் கடவுள் எங்கள் ஓய்வறையில் அமர்ந்திருப்பார் என்று நம்புகிறேன்.

 

ரோஹித் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய ஒரு வீரர். இந்த தொடரில் அவர் ரன் அடித்திருந்தாலும் அல்லது அடிக்காமல் போயிருந்தாலுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டைச் சதங்கள் அவருக்காக எப்போதும் பேசும்.

 

யாரும் இந்தச் சாதனையை செய்ததில்லை. டாப் ஆர்டரில் மிகவும் சீராக ஆடி வருகிறார், அவரது ஃபார்ம் ஒன்றும் ஆச்சரியமானதல்ல, உலகக்கோப்பையில் பார்மில் இருக்கிறாரா, ஒரு பயிற்சியாளருக்கு இதைவிட மகிழ்ச்சி என்ன வேண்டும்?

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்த உலகக்கோப்பையில் ரோஹித் எடுத்த சதம் சிறந்தது, காரணம் அது கடினமான பிட்ச், இரண்டகமாக இருந்தது பிட்ச், ஆகவேதான் அது ரோஹித்தின் ஸ்பெஷல் இன்னிங்ஸ் என்று கருதுகிறென், அதுதான் அவரது சிறந்தவற்றில் ஒன்று.

 

இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close