[X] Close

மழை குறுக்கிட்ட அரையிறுதி: நியூஸி. மேலும் தொடரவில்லையெனில் இந்திய அணியின் இலக்கு என்ன?


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 18:59 pm
  • அ+ அ-

மான்செஸ்டரில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா பவுலிங் செய்ய முதலில் பேட் செய்து வரும் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் என்று மிகவும் மந்தமான ஒரு நிலையில் உள்ளது.

 

கடினமான பிட்ச், இந்திய அணியின் கிடுக்கிப் பிடி பந்து வீச்சு (சாஹல் நீங்கலாக) ஆகியவையும் நியூஸிலாந்தின் தடுமாற்றத்துக்குக் காரணம். இந்நிலையில் 47வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

 

எனவே இந்நிலையில் நியூஸிலாந்து அணி மீண்டும் பேட் செய்ய முடியாது போனால், இந்திய அணிக்கு 20 ஓவர்கள்தான் ஆட இருக்கிறது எனும்போது இந்திய அணிக்கு 148 ரன்கள் இலக்கு ஆகும்.  இது ஒன்று.

 

இரண்டாவதாக இந்திய அணிக்கு 46 ஓவர்கள் ஆட முடியும் என்றால் டி.எல்.எஸ் முறைப்படி மாற்றியமைக்கப்பட்ட இலக்கு 237 ரன்களாக இருக்கும்.

 

ஆனால் இன்று எப்படியிருந்தாலும் அரையிறுதியை முடிக்கவே நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள், ஆனால் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை நாளை போட்டி தொடரலாம், அதாவது எந்த நிலையில் ஆட்டம் இன்று  ஆட முடியாமல் போனதோ அதே நிலையிலிருந்துதான் ஆட்டம் தொடரும்.

 

நாளையும் மழையினால் ஆட்டம் நடக்க முடியாமல் போனால் லீக் மட்டத்தில் அட்டவணையில் உயர்ந்த இடத்தில் இருந்த அணி இறுதிக்குத் தகுதி பெறும் அது இந்தியாதான்.

 

இறுதிப்போட்டியும் மழையால் தடைபட்டு ரிசல்ட் வராது போனால் ரிசர்வ் நாள் முடிந்து இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.  ஆட்டம் ‘டை’ ஆனால் சூப்பர் ஓவர் வெற்றி அணியை முடிவு செய்யும்.

 

தற்போது ராஸ் டெய்லர் 85 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்தும், டாம் லேதம் 3 ரன்கள் எடுத்தும் களத்தில் நிற்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close