[X] Close

டாஸ் வென்றது நியூஸிலாந்து: பும்ராவுக்கு முதல் விக்கெட்


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 15:33 pm
  • அ+ அ-

மான்செஸ்டரில் நடந்துவரும் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பைப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.

மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்டில் இன்று நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து மோதுகிறது நியூஸிலாந்து அணி.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். நியூஸிலாந்து அணியில் டிம் சவுதிக்கு பதிலாக பெர்குஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆடிய அதே இந்திய அணியில் ஒருமாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. குல்தீப் யாதவுக்கு பதிலாக யஜுவேந்திர சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார்.

முகமது ஷமி சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷமி இல்லை, புவனேஷ்வர் குமார், பும்ரா மட்டுமே இருக்கிறார்கள்.

அதேபோல தினேஷ் கார்த்திக் அணியில் தொடர்ந்து 2-வது போட்டியிலும் வாய்ப்பு பெற்று இருப்பது மகிழ்ச்சியானது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சோபிக்காத தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் தனது திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

toss.jpg 

சுழற்பந்துவீச்சுக்கு சாஹல், ரவிந்திர ஜடேஜா ஆகியஇருவர் மட்டுமே உள்ளனர். வேகப்பந்தவீச்சில் பும்ரா, புவனேஷ்வர்க குமார், ஹர்திக் பாண்டியா ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர். ஆக 5 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே இந்திய அணி களமிறங்குகிறது.

ஆனால், நியூஸிலாந்து அணியில்  நிகோலஸ், நீஷம், கிராண்ட்ஹோம், சான்ட்னர், ஹென்றி, பெர்குஷன், போல்ட், தேவைப்பட்டால் வில்லியம்ஸன் என 8 பேர் பந்துவீசும் திறமையுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் எப்படி:

ஆடுகளம் கடினமாகவும், நன்கு காய்ந்தும் இருப்பதால் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி பேட்ஸ்மேனே நோக்கி வரும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக பந்துகள் சுழலும். முதலில் பேட்செய்யும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால், 300 ரன்களை அடிக்கலாம். சேஸிங் செய்யும் போது சற்று கடினமாகஇருக்கும்.

முதல் விக்கெட்

நியூஸிலாந்து அணிக்கு நிகோலஸ், கப்தில் தொடக்கம் அளித்தனர். பும்ராவும், புவனேஷ் குமாரும் தொடகத்தில் இருந்தே நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை மிரட்டினர். புவனேஷ்வர் குமார், ஷமி இருவரும் வீசிய முதல் ஓவர் மெய்டனாக அமைந்தது. 4-வது ஓவரை பும்ரா வீசினார். லென்தில் வீசப்பட்ட 3-வது  பந்து பவுன்ஸரில் பாம்பு போன்று வளைந்து சென்று, அதை கப்தில் கவனக்குறைவாக பேட்டில்  வாங்கியவுடன், அது 2-வது ஸ்லிப்பில் இருந்த கோலியிடம் கேட்ச் ஆனது. கப்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close