[X] Close

நீங்கள் எனக்கு எப்போதும் சிறப்பானவர்: கங்குலிக்கு யுவராஜ் வாழ்த்து


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 16:47 pm
  • அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி  இன்று தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ், கைஃப் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கங்குலிக்கு தங்கள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர் .

யுவராஜ்: இந்திய அணியின் எதிர்காலத்துக்காக எங்களை அடித்தளமிட்டு உருவாக்கி... தொடர்ந்து ஆதரவு அளித்தவர். எனக்கு எப்போதும் நீங்கள் சிறப்புக்குரியவர். பிறந்த நாள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

கைஃப்: இந்திய அணியில் அற்புதமான கலாச்சாரத்தை உருவாக்கிய மனிதருக்கு வாழ்த்துகள். புத்திசாலியான தலைவர். பிறந்த நாள் வாழ்த்துகள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close