[X] Close

அரை இறுதியில் நியூஸிலாந்துடன் இந்திய அணி நாளை பலப்பரீட்சை: 11-ம் தேதி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதல்


11

  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:34 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் நாளை (9-ம் தேதி) மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை 11-ம் தேதி எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மே 30-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஆட்டத்துடன் முடி வடைந்தது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமையே அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகளின் விவரமும் முழுமையாக தெரியவந்தது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. கடைசி இடத் துக்கு பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் இடையே போட்டி நிலவி யது. இந்த இரு அணிகளும் தலா 11 புள்ளிகளை பெற்ற போதிலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து கடைசி அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது.

புள்ளிகள் பட்டியலில் இங்கி லாந்து 3-வது இடத்தையும், நியூஸி லாந்து 4-வது இடத்தையும் பிடித் திருந்தது. அதேவேளையில் முதல் இரு இடங்களில் இருந்த ஆஸ் திரேலியா, இந்தியா தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் நேற்று முன்தினம் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஆனால் ஆஸ்திரேலிய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது.

இந்தத் தோல்வியால் ஆஸ் திரேலிய அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மாறாக இந்திய அணி 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதன் மூலம் இந்திய அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் புள்ளி கள் பட்டியலில் 4-வது இடம் பிடித்த நியூஸிலாந்துடன் மோது கிறது. இந்த ஆட்டம் மான் செஸ்டர் நகரில் உள்ள ஓல்டுடிராஃ போர்டு மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

இந்தியா, நியூஸிலாந்து அணி கள் லீக் சுற்றில் கடந்த ஜூன் 13-ம் தேதி மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய அணி லீக் சுற்றில் 9 ஆட்டங்களில் 7 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தது.

அதேவேளையில் நியூஸி லாந்து வலுவில்லாத அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றி களுடன் தொடரை சிறப்பாக தொடங்கியது. ஆனால் கடைசி யாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக (பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து) தோல்வி கண்டது. நியூஸிலாந்து அணி 9 ஆட்டங் களில் 5 வெற்றிகளை பெற்றிருந் தது.

11-ம் தேதி பர்மிங்காமில் நடை பெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை, தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி சந்திக்கிறது. இந்த இரு அணிகளும் கடந்த ஜூன் 25-ம் தேதி லீக் சுற்றில் நேருக்கு நேர் மோதியிருந்தன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்திருந்தது.

இரு அரை இறுதி ஆட்டங்களிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி புகழ் வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close