[X] Close

‘‘அனைவருக்கும் நீங்கள் அண்ணன்; எனக்கு என்றுமே கேப்டன்’’- தோனிக்கு வாழ்த்து கூறி கோலி நெகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 20:03 pm
  • அ+ அ-

அனைவருக்கும் நீங்கள் தான் அண்ணன். நான் ஏற்கெனவே கூறியது போல என்றுமே எனது கேப்டன் நீங்கள் தான் என தோனிக்கு, கோலி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தவர் தோனி. இந்திய அணிக்காக 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்று கொடுத்த பெருமைக்குரியவர் தோனி.

தோனிக்கு இன்று தனது 38-வது பிறந்தநாள் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு அவரின் ரசிகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ வாரியம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சென்னை ரசிகர்கள் ‘தல தல’ என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வீராட் கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில் தோனிக்கு வாழ்த்துச்செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் ''பிறந்தநாள் வாழ்த்துகள் மஹி. வெகுசிலர் மட்டுமே நம்பிக்கை, மரியாதையின் அர்த்தங்களை புரிந்துகொள்கிறார்கள். பல வருடங்களாக உங்கள் நட்பில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. எங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் அண்ணன். நான் ஏற்கெனவே கூறியது போல என்றுமே எனது கேப்டன் நீங்கள் தான்'' எனக் கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close