[X] Close

'இந்திய அணிக்கு இப்போது சந்தோஷம்தானே': ஆஸி.வீழ்த்தியபின் டூபிளெசிஸ் உற்சாகம்


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 13:57 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலிய அணியை நாங்கள் வீழ்த்தியது இந்திய அணிக்கு சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மான்செஸ்டரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்தது. 326 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய  ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 315 ரன்களுக்கு ஆட்டமிழந்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூபிளெசிஸ் உலகக் கோப்பைப் போட்டியில் 2-வது சதம் அடித்து அசத்தினார். அணியின் ஸ்கோர்  உயர்வுக்கும் முக்கியமான காரணமாகவும் இருந்தார். போட்டி முடிந்தபின் நிருபர்களுக்கு டூபிளெசிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

South-Africa-s-Faf-du-.jpg 

ஆஸ்திரேலிய அணியை நாங்கள் தோற்கடித்தது இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், கடந்த 3 போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி ஃபார்மில் இல்லை, மோசமாக விளையாடி வருகிறார்கள். அவர்களுடன் இந்திய அணி மோத இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து  அணியும் மோதும் என நினைக்கிறேன்.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகங்களில் சேஸிங்கிலும்சரி, முதலில் பேட் செய்தாலும் சரி, இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் இதுபோன்று நெருக்கடியாக போட்டி சென்று கடைசிநேரத்தில் வெல்வது அலாதி இன்பம். ரசிக்கக்கூடியது. கடந்த 1992-ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய அணியை உலகக் கோப்பைப் போட்டியில் வென்றது மகிழ்ச்சிதான். எங்களின் முடிவு கூட மகிழ்ச்சியுடன் இருக்கிறது.

வேண்டர் டூசைன் இன்னிங்ஸ் அடுத்துவரும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். 30 பந்துகளில் 5 ரன்கள் இருந்த நிலையில், அதன்பின் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இம்ரான் தாஹிர் அணியின் இதயத்துடிப்பு, டுமினி அணியின் தந்தையைப் போன்றவர் இருவரையும் நாங்கள் இழக்கிறோம். உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியபோதிலும் இதுபோ்ன்ற வெற்றிகள் மனநிறைவு தருகிறது இவ்வாறு டூபிளெசிஸ் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close