[X] Close

'ஹேப்பி பர்த்டே தோனி': உலக அதிசயங்களில் தோனி பிறந்தநாள்: ஐசிசி, சேவாக், பிசிசிஐ, தவண் புகழாரம்


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 13:14 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 38-வது பிறந்தநாள் என்பதால், கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ வாரியம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தவர் தோனி. இந்திய அணிக்காக 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்று கொடுத்த பெருமைக்குரியவர் தோனி.

தோனிக்கு இன்று தனது 38-வது பிறந்தநாள் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு அவரின் ரசிகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ வாரியம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

bcci.jpg 

பிசிசிஐ வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் " நான் உலகக் கோப்பைகள், நான்கு விதமான தோற்றம், எதை நீங்கள் விரும்புகிறார்கள். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் " எனத் தெரிவித்துள்ளது.

ஐசிசி வெளியிட்ட ட்விட்டர் செய்தியில்  " ஒரு மனிதர் கோடிக்கணக்கான பாராட்டுகள், வாழ்க்கை முழுவதும் நினைவுகள், தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் " எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் சேவாக் ட்விட்டரில்  கூறுகையில் " உலகில் 7 கண்டங்கள், இசையில் 7 அடிப்படை ஸ்வரங்கள், உடலில் 7 சக்கரங்கள், வாரத்தில் 7 நாட்கள், திருமணத்தில் 7 கட்டங்கள், உலகில் 7 அதியசங்கள், 7-வது மாதம், 7-ம் தேதி இன்றும் கிரிக்கெட் உலகில் அதிசயம்தான். பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி, கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

swag.jpg 

முன்னாள் வீரர் முகமது கைப் ட்விட்டரில் கூறுகையில், " கடந்த 2004-ம் ஆண்டு இருவரும் முதலில் ஒன்றாக விளையாடினோம். விசாகப்பட்டிணத்தில்  பாகிஸ்தானுக்கு எதிராக தோனி அடித்த 148 ரன்கள் திரும்பிபார்க்க வைத்தது. தோனிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் ட்விட்டரில் கூறுகையில், " மகி பாய்க்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்னுடைய அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. உங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான வெற்றிகளையும், மகிழ்ச்சிசயையும் பெற வாழ்த்துகிறேன் கடவுள் ஆசிர்வதிப்பாராக " எனத் தெரிவித்துள்ளார்.

kedar_YasM7Go.jpg 

முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் ட்விட்டரில் கூறுகையில், " வாழ்க்கையில் அனைத்து நலன்களையும், அன்பையும், வெற்றியையும் பெற தோனி பெற வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி " எனத் தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவண் ட்விட்டரில் கூறுகையில், " தனக்கென கிரிக்கெட்  அடையாளத்தை  உருவாக்கிய தோனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

laxman_ba0O1LN.jpg 

ஹர்திக் பாண்டியா  இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கருத்தில், " மகி பாய்க்கு(தோனி அண்ணன்) என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு கற்றுக்கொள்ள அதிகமான வாய்ப்பு கிடைக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்மாதிரி" எனத் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கருத்தில், " தோனிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு நண்பராகவும்,ஆசிரியராகவும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் " எனத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close