[X] Close

‘மேற்கிந்தியத் தீவுகளுடனான தோல்வியே வெளியேற்றியது’- சர்பிராஸ் அகமது


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 09:06 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுடனான தோல்வியால் தான் நாங்கள் உலகக் கோப்பையிலிருந்து வெளியேற நேரிட்டது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் நாங்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் தோல்வி கண்டோம். அந்த ஆட்டத்தில் 105 ரன்களுக்கு எங்கள் அணி சுருண்டது. பின்னர் நடைபெற்ற ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி னோம். ஆனாலும் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டோம். இது துரதிருஷ்டவசமானது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தோல்விதான் உலகக் கோப்பையிலிருந்து நாங்கள் வெளியேறக் காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்திருந்ததால் எங்களது ரன் ரேட் வெகுவாகக் குறைந்தது. அந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனால் நிகர ரன் விகிதத்தில் பின்தங்கிவிட்டோம்” என்றார்.

பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 11 புள்ளிகள் பெற்றது, நியூஸிலாந்துடன் இது புள்ளிகள் அளவில் சமம்தான். ஆனால் நெட் ரன் ரேட் (-0.43) அடிப்படையில் பாகிஸ்தான் அணியால் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

மாறாக நியூஸிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 0.175 என்ற நிகர ரன் விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்குத் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close