[X] Close

பும்ரா புதிய சாதனையுடன் 3 விக்.; மேத்யூஸ் சதத்துடன் இலங்கை அணி 264 ரன்கள்


3-264

  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 19:20 pm
  • அ+ அ-

ஹெடிங்லீயில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் 44வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த இரண்டாவது இந்திய பவுலரானார். மேத்யூஸ் சதமெடுக்க முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

 

இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே விக்கெட்டை பும்ரா, தோனி கேட்சுக்கு வீழ்த்த தன் 100வது ஒருநாள் விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்தார். பும்ரா 57வது ஒருநாள் போட்டியில் 100 விக்கெட்டுகள் சாதனை நிகழ்த்திய 2வது பவுலராக ஷமி இவரை விட ஒரு போட்டி குறைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

 

இதில் உலக சாதனை வைத்திருப்பவர் ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான், 44 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

டாஸ் வென்ற இலங்கை அணி 11.4 ஓவர்களில் 55/4 என்று சரிவு கண்டது. கருணரத்னே, குசல் பெரேராவை பும்ரா காலி செய்ய அவிஷ்கா பெர்னாண்டோ 4 அற்புதமான பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து இருளில் மின்னல் காட்டி பாண்டியாவிடம் வீழ்ந்தார். மெண்டிஸ், ஜடேஜா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். இந்த 4 விக்கெட்டுகளிலும் தோனி பங்களிப்பு முற்றிலும் இருந்தது, 3 கேட்ச் ஒரு ஸ்டம்பிங்.

 

பிறகு திரிமானே (53), அஞ்சேலோ மேத்யூஸ் (113) இணைந்து ஸ்கோரை 124 ரன்கள் கூட்டணியுடன் 179 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது 38வது ஓவரில் திரிமானே, குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆனார். பிறகு டிசில்வா (29) இணைய மேத்யூஸ் மேலும் 74 ரன்கள் கூட்டணி அமைத்தார், அப்போது பும்ரா பந்தில் மேத்யூஸ் ஆட்டமிழந்தார்.

 

இலங்கை 264/7 என்று முடிந்தது. புவனேஷ்வர் குமார் 10 ஓவர்களில் 73 ரன்களை வாரி வழங்கினார் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். பும்ரா மீண்டும் மிகப்பிரமாதமாக வீசி 10 ஓவர்கள் 37 ரன்கள் 3 விக்கெட் எடுத்தார். 36 டாட்பால்களை வீசினார் இவர் கொடுத்த 3 பவுண்டரிகளில் ஆவிஷ்கா பெர்னாண்டோ அடித்தது 2 அற்புத அடுத்தடுத்த பவுண்டரிகளாகும். ஜடேஜா 10 ஓவர் 40 ஒரு விக்கெட் என்று அசத்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவர் 58 ரன்கள் கொடுத்தார்.

 

இந்தியா வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் முதலிடம் செல்ல வாய்ப்பு உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close