[X] Close

இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர் தோனி: ஐசிசி வெளியிட்ட வீடியோ


  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 16:22 pm
  • அ+ அ-

இந்திய அணி வீரர் தோனியின் கிரிக்கெட் பயணத்தை கொண்டாடும் வகையில் ’இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர்’ என்ற பெயரில் ஐசிசி வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளது.

தோனி நாளை தனது 38வது பிறந்த நாளை கொண்டாட இருகிறார். இந்த  நிலையில் தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள தோனியை கவுரவிக்கும் வகையில் அவரது சாதனைகள் அடங்கிய வீடியோ ஒன்றை” இந்த பெயர் இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியது.

இந்த உலகம் முழுவதும் கடந்து பல லட்சக்கணக்கான மக்களுக்கு முன்னுதாரணமாக இதை ஐசிசி வெளியிட்டுள்ளது.

மறுக்க முடியாத பெயர்.... எம் எஸ் தோனி இது வெறும் பெயர் மட்டுமல்ல” என்று பெயரிட்டு பதிவிட்டுள்ளது.

இந்த வீடியோவில் கோலி, பும்ரா, பட்லர், ஸ்டோக்ஸ் ஆகியோர் தோனியை பற்றி பேசியுள்ளனர்.

கோலி: அவர் எப்போது அமைதியாகவும், ஒருங்கமைத்த எண்ணகளோடு காணப்படுவார். தோனியிடமிருந்து கற்பதற்கு ஏராளம் உள்ளது. அவர் என்னுடைய கேப்டன்.. எப்போதும் என்னுடைய கேப்டன். எங்களுடைய புரிதல் எப்போதும் அற்புதமானது.  நான் எப்போதும் அவரது அறிவுரையை கேட்பேன்.

பும்ரா: நான் 2016 ஆம் ஆண்டு அணியில் சேரும்போது அவர் கேப்டனாக இருந்தார்.

அணியில் யாரேனும் துவண்ட நிலையில் இருக்கும்போது அவர் எப்போது உதவியாக இருந்திருக்கிறார்”

ஸ்டோக்ஸ்: சிறந்த விக்கெட் கீப்பர்.. அவரை போன்று மற்றொரு சிறந்த வீரர் இல்லை என்று எண்ணுகிறேன்.

பட்லர்: விக்கெட் கீப்பராக அவர்தான் எனது ரோல் மாடல். அவரை களத்தில் மிகவும் எனக்கு பிடிக்கும். அவர் ஸ்டெம்புக்கு பின்னால் சிறந்த வேகத்தை உடையவர்.

அவர் பேட் செய்யும்போது மிகுந்த அமைதியாக இருப்பார்.  அவர் இந்த விளையாட்டு சிறந்த தூதுவர். நான் தோனியின் மிகபெரிய ரசிகன்”

என்று தெரிவித்துள்ளனர்.

வீடியோ  

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close