[X] Close

'மே.இ.தீவுகள் அணியிடம் அடைந்த தோல்விக்கு அதிக விலை கொடுத்துவிட்டோம்': பாக்.கேப்டன் வருத்தம்


  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 11:57 am
  • அ+ அ-

-பி.டிஐ.

மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் லீக் ஆட்டத்தில் மோசமாக தோற்றதற்கு அரையிறுதிக்குகூட செல்லமுடியாமல் அதிக விலை கொடுத்துவிட்டோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது வேதனை தெரிவித்துள்ளார்

உலகக்கோப்பைப் போட்டியில் லாட்ஸ் மைதானத்தில் நேற்றஉ நடந்த லீக் ஆட்டத்தில் வங்கேதேசத்துடன் மோதியது பாகிஸ்தான். இந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றபோதிலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை.

நியூஸிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் தலா  5 வெற்றிகள் 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து 0.175 என உயர்ந்த இடத்திலும், பாகிஸ்தான் அணி -043 ஆகவும் இருந்தது. இதனால், நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகி்ஸ்தான் அணி மோசமாக தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லமுடியாமல் வெளியேறக் காரணமாக அமைந்தது.

paks.jpg 

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது ஊடகங்களிடம் கூறியதாவது:

நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடினோம், தொடர்ந்து 4 வெற்றிகளைப் பெற்றும் எங்களால் அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை என்பது, மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த மோசமான தோல்வி, அந்த ஒருபோட்டிதான் எங்களின் நிலையை மாற்றிவிட்டது. அந்த போட்டியில் பேட்டிங் முறையாக செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. ஆனால் மற்றவகையில் எங்கள் அணி வீரர்கல் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டார்கள்.

அரையிறுதிக்கு ஏன் செல்லவில்லை, தோல்விக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து வீரர்களுடன் அமர்ந்து பேசுவோம். இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது, அணியுடன் அதிகமான பணியாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போதுள்ள நிலையில் எங்களுக்கு கிடைத்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இமாம் உல் ஹக், பாபர் ஆஸம், ஹேரிஸ் சோஹைல், அமிர், சதாப்கான், வகாப், அப்ரிடி ஆகியோர் வெற்றிக்கு முக்கியமானவர்கள்.

குறிப்பாக ஷாகீன் ஷா அப்ரிடி பந்துவீசிய முறையும், கட்டுக்கோப்பும் மிக அற்புதம். நான் பார்த்தவரையில் சிறந்த பந்துவீச்சாக இருந்தது

இவ்வாறு சர்பிராஸ் அகமது தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close