[X] Close

முதலிட முனைப்பில் ஆஸி.


  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 09:06 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் நகரில் இன்று மாலை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல்அணியாக அரை இறுதியில் நுழைந்திருந்தது. 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியைவீழ்த்தி லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்வதில் கவனம்செலுத்தக் கூடும்.

 ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக மட்டுமே தோல்விகண்டிருந்தது. மற்ற 7 ஆட்டங்களிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் (516), ஆரோன் பின்ச் (504) ஆகியோரது ரன் வேட்டை அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது.

கவாஜா (298), ஸ்மித் (287) ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்த்து வருகின்றனர். பந்து வீச்சில்24 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள மிட்செல் ஸ்டார்க் அதீத பார்மில் உள்ளார். இக்கட்டான தருணங்களில் தனது இன் ஸ்விங்கர் யார்க்கர்களால் விக்கெட்கள் கைப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அவரது செயல் திறன் கூடுதல் வலு சேர்ப்பதாக உள்ளது.

 தென் ஆப்பிரிக்க அணியானது இம்முறை பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறியதால் தொடரின் முதல் பகுதியிலேயே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. பேட்டிங்கில் ஹசிம் ஆம்லா, குயிண்டன் டி காக், டு பிளெஸ்ஸிஸ் ஆகியோர்  தொடர்ச்சியான செயல் திறனை வெளிப்படுத்தாதது பெரிய பாதிப்பை ஏற் படுத்தியது.

பந்து வீச்சில் ரபாடாவிடம் இருந்தும் எதிர்பார்த்த அளவிலான வெற்றிக்கான பங்களிப்பு வெளிப்பட வில்லை. 8 ஆட்டத்தில் வெறும் 5 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக் கூடும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close