[X] Close

தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 09:03 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

2019-20-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:

விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக தேசிய விளையாட்டுக் கல்வி வாரியத்தை (என்எஸ்இபி) அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விளையாட்டு வளர்ச்சிக்காக 2017-ம் ஆண்டு அக்டோபரில் கேலோ இந்தியா திட்டம் (விளையாடு இந்தியா) தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் விளையாட்டும், விளையாட்டு வீரர்களும் வளர வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் மூலை முடுக்குகளிலும் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கேலோ இந்தியா திட்டத்தை விரிவுபடுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைத்து, விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்காக இந்த ஆண்டு ரூ.2,216.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ.601 கோடியும், விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை நிதிக்கு ரூ.89 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு ரூ.245 கோடியும், விளையாட்டு வீரர்களுக்கு விருது, ஊக்கத்தொகை வழங்க ரூ.94.07 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close