[X] Close

‘பெரிய அளவில் ரன்களைக் குவிக்க வேண்டும்’ - டாஸ் வென்ற பாக். கெப்டன் சர்பராஸ் முதலில் பேட்டிங் தேர்வு


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 15:21 pm
  • அ+ அ-

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் சுற்று 43வது போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

 

பாகிஸ்தான் அணி பெரிய அளவில் ரன்களை எடுத்து மிகப்பெரிய இடைவெளியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பது ஒரு கணக்கீட்டு சவுகரியத்துக்குத்தான்.  மிகமிகக் கடினமான விஷயம்.

 

டாஸ் வென்ற சர்பராஸ் கூறியதாவது:  ஒரே ஒரு வாய்ப்பு பெரிய அளவில் ரன்களைக் குவிக்க வேண்டும். மார்ஜின் மிகப்பெரியது என்பதை நாங்கள் அறிவோம். அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்வி கடும் ஏமாற்றமளிக்கிறது. ஆனால் போட்டித் தொடரை வெற்றியுடன் முடிக்க விரும்புகிறோம், என்றார்.

 

வங்கதேச அணியில் சபீர் ரஹ்மானுக்குப் பதில் மஹ்முதுல்லா வந்துள்ளார். இது எனது கடைசி உலகக்கோப்பை.. ஆம் 100%. என்றார்.

 

பாகிஸ்தான் அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது.

 

ஷாகிப் அல் ஹசன் கூறும்போது, “ஆம் நாங்கள் வெளியேறிவிட்டோம், ஆனால் இதுவும் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டி ஆகவே நாங்களும் வெற்றியுடன் முடிக்கவே விரும்புகிறோம். சில வேளைகளில் பீல்டிங் எங்களை கவிழ்த்தது, மற்றபடி நன்றாகவே ஆடினோம். பேட் மற்றும் பந்து வீச்சில் என்னுடைய பங்களிப்பு குறித்து எனக்கு பெருமையாக உள்ளது. இந்த மைதானத்தில் நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் ஆடியதில்லை எனவே இது ஒரு உற்சாகமான தருணமே.” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close