[X] Close

நீங்கள் சிறந்த வீரரை சந்தேகிக்கக் கூடாது: தோனி குறித்து மைக்கேல் கிளார்க் கருத்து


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 11:52 am
  • அ+ அ-

நீங்கள் சிறந்த வீரரை சந்தேகிக்கக் கூடாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் தோனியின் ஆட்டம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் சிலர் விமர்சித்து வரும் வேளையில் ஆஸ்திரேய முன்னாள் கேப்டன் கிளார்க், தோனியை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது , ”மக்கள் தோனியை சந்தேகிக்கக் கூடாது என்பதை கற்றுக் கொள்ளவில்லை. இதை நான் திரும்பத் திரும்பக் கூறுவேன். 

நீங்கள் சிறந்த வீரர்களை சந்தேகிக்கக் கூடாது. தோனி சிறந்தவர். தற்போது இந்திய அணி தோனி இல்லாமல் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் தோனியை  வீணாக்கி விடாதீர்கள்.

இந்திய அணிக்கு தோனி அவசியம். தேவைப்படும்வரை அவரைப் பாதுகாத்து வையுங்கள். அரையிறுத்தியிலோ, இறுதிப் போட்டியிலோ அவர் சிறப்பாக விளையாடலாம்” என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close