[X] Close

கடைசி ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் தோல்வி


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 09:36 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி யடைந்தது.

லீட்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான கிறிஸ் கெயில் 7 ரன்களில் தவ்லத் ஸத்ரன் பந்தில் ஆட்டமிழந்தார். இதை யடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப், எவின் லீவிஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். எவின் லீவிஸ் 78 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில், மொகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன் இணைந்து எவின் லீவிஸ் 88 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய சிம்ரன் ஹெட்மையர் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த அவர், தவ்லத் ஸத்ரன் பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 92 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் சேர்த்த நிலையில் மொகமது நபி பந்தில் வெளியேறினார்.

இறுதிக்கட்ட ஓவர்களில் நிக்கோலஸ் பூரன், கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடியாக விளையாடியது. நிக்கோலஸ் பூரன் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஜேசன் ஹோல்டர் 34 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒருபவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் சயத் ஷிர்ஷாத் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 69 பந்துகளில் 105 ரன்களை விளாசி இருந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார் பில் தவ்லத் ஸத்ரன் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 312 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி கடுமையாக போராடிய நிலையில் 50 ஓவர்களில் 288 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக இக்ரம் அலிகில் 86, ரஹ்மத் ஷா 62, அஸ்கர் ஆப்கன் 40, நஜிபுல்லா ஸத்ரன் 31, சயத் ஷிர்ஸாத் 25 ரன்கள் சேர்த்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் பிராத்வெயிட் 4, கேமார் ரோச் 3 விக்கெட்கள் கைப்பற்றினர். 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் பங்கேற்ற 9 ஆட்டங்களிலும் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close