[X] Close

44 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் நுழைந்தது பெரு: 7-ம் தேதி பிரேசிலுடன் பலப்பரீட்சை


44-7

  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 08:12 am
  • அ+ அ-

அலெக்ரே கோபா அமெரிக்கா கால் பந்து தொடரில் 44 வருடங்களுக் குப் பிறகு பெரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று போர்டோ அலெக்ரே நகரில் நடப்பு சாம்பியனான சிலி அணியை எதிர்த்து பெரு விளையாடியது. தொடக்கத்தில் இருந்தே பெரு அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த நெருக்க மான வாய்ப்பை பெரு அணி தவறவிட்டது. கேப்டன் குயேரோ விடம் இருந்து பந்தை பெற்ற கிறிஸ் டியன் குயவா பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத் தின் வலது பக்கம் விலகிச் சென்றது.

7-வது நிமிடத்தில் சிலி வீரர் களான அலெக்சிஸ் சான்செஸ் மற்றும் ஜீன் பியூஸ்ஜோர், சார்லஸ் அரங்குயிஸ் ஆகியோர் கூட்டணி அமைத்து அற்புதமாக பந்தை கடத்திச் சென்றனர். அப்போது பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து சார்லஸ் அரங்குயிஸ் இலக்கை நோக்கி உதைத்த பந்து இடது புறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

20-வது நிமிடத்தில் குயேரோ உதவியுடன் பந்தை பெற்ற எடிசன் புளோரஸ் பாக்ஸின் இடதுபுறத்தில் வலுவில்லாமல் அடித்த ஷாட் வலதுபுறம் விலகிச் சென்றது. ஆனால் அடுத்த நிமிடத்தில் குயவா ஸின் கிராஸை பெற்ற ஆந்த்ரே காரிலோ அதனை லாவகமாக எடிசன் புளோரஸிடம் தட்டிவிட சுமார் 18 அடி தூரத்தில் இருந்து அவர், உதைத்த பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் பெரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

38-வது நிமிடத்தில் பெரு அணி தனது 2-வது கோலை அடித்தது. வலது புற கார்னர் அருகே காரிலோவிடம் இருந்த பந்தை பறிப்பதற்காக சிலி கோல் கீப்பர் கேபிரியல் ஆரியாஸ் தனது இடத்தை விட்டு வெகு தூரம் வில கிச் சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்த யோஷிமர் யோடு னுக்கு பந்தை கிராஸ் செய்தார் காரிலோ.

பெரு அணியின் 4 டிபன்டர் கள் தன்னை சூழ்ந்திருந்த போதி லும் பந்தை அருமையாக கட்டுப் படுத்திய யோஷிமர் யோடுன் கோல்கீப்பர் ஆரியாஸ் தனது இடத் துக்கு விரைந்து வருவதற்குள் மின்னல் வேகத்தில் கோலாக மாற் றினார். 44-வது நிமிடத்தில் சிலி வீரர் ஜோஸ் ஃபுயன்ஸலிடா இலக்கை நோக்கி துல்லியமாக அடித்த பந்தை பெரு அணியின் கோல் கீப்பர் பெட்ரோ காலெஸ் ஒற்றை கையால் அற்புதமாக தட்டிவிட்டார்.

முதல் பாதியில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 51-வது நிமிடத்தில் சிலி வீரர் எட்வர்டோ வர்காஸ் தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தின் கம்பி மீது பட்டு விலகிச் சென்றது. இதன் பின்னர் எவ்வளவோ போராடியும் சிலி அணியால் கோல் அடிக்க முடி யாமல் போனது. 90 நிமிடங்கள் முடிவில் பெரு அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.

இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத் தின் முதல் நிமிடத்தில் ரெனாடோ டாபியா த்ரோ செய்த பந்தை 18 அடி தூரத்தில் இருந்த பெற்ற குயேரேரோ கோலாக மாற்ற பெரு அணி 3-0 என்ற முன்னிலையை அடைந்தது. அடுத்த 3-வது நிமி டத்தில் சிலி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் எட் வர்டோ வர்காஸ் இலக்கை நோக்கி உதைத்த பந்தை பெட்ரோ காலெஸ் அற்புதமாக தடுத்தார். முடிவில் பெரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அந்த அணி 44 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக பெரு அணி 1975-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. பெரு அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இருந்த சிலி அணியின் கனவு தகர்ந்தது.

அந்த அணி கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டு அர்ஜென்டினாவை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 7-ம் தேதி மரக்கானா மைதானத் தில் நடைபெறும் இறுதிப் போட்டி யில் பெரு அணி, பிரேசிலை எதி ர்கொள்கிறது. பிரேசில் தனது அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்திருந்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close