[X] Close

அரையிறுதிக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தரத்தை கேள்வி கேட்ட ஷோயப் அக்தர்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 16:45 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்.

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறாத நிலையில், இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் தரம் குறித்து  பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய, இந்திய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தன. லீ செஸ்டர் ஸ்ட்ரீட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 3-வது அணியாக அரையிறுதிக்கு தகுதியானது. நியூஸிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்று நியூஸிலாந்துக்கு இணையாக புள்ளிகள் பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் வரும் போது அரையிறுதிக்கு தகுதி பெறுவது இயலாது. இதனால் இந்த முறை பாகிஸ்தானின் பயணம் முதல் சுற்றிலேயே முடிகிறது.

பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் என்று நம்பிக்கையுடன் கூறி வந்த அந்நாட்டு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர், உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தரம் சரியில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார். யூடியூப்பில் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிவரும் கிரிக்கெட்டின் தரம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் கிரிக்கெட்டின் தரம் மிகவும் கீழாகச் சென்றுவிட்டது.

பேட்ஸ்மேன்கள் எளிதாக ஸ்கோர் செய்து ரன் சேர்க்கிறார்கள். பந்துவீச்சாளர்களிடம் ஒரு போட்டித்திறன் இல்லை. 1990களிலும், 2000ம் ஆண்டுகளிலும் இருந்த சுழற்பந்துவீச்சு அல்லது வேகப்பந்துவீச்சில் இருந்த தரம் இப்போது இல்லை.

Pakistan-3-640x360.jpg 

3 பவர்ப்ளே வைத்துள்ளார்கள், 2 புதிய பந்துகளை  பயன்படுத்துகிறார்கள். இதனால் எளிதாக ஸ்கோர் செய்ய முடியும்.

இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூஸிலாந்து வீரர்களைப்பார்த்தால் இப்போதுதான் கிரிக்கெட் கற்றுக்கொள்பவர்களைப் போல் விளையாடினார்கள்.

நியூஸிலாந்து அணியினர் நேற்று நடந்தஆட்டத்தில் விளையாடிய விதம் எனக்கு வேதனையாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒருபோட்டித்திறனை வெளிப்படுத்தி, சவால் அளித்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால், எதுவுமே இல்லாமல் எளிதாக சரணடைந்துவிட்டார்கள். தரமான கிரிக்கெட்டை அவர்கள் விளையாடவில்லை.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான எங்கள் ஆட்டம் மோசமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான எங்களின் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தோம். இந்த 3 போட்டிகளும் மிகக் கடுமையாக இருந்தன. இதனால்தான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தோல்விக்கு யாரையும் பொறுப்பேற்கச் சொல்ல முடியாது

அனைத்தும் எங்கள் கையைவிட்டு போகவில்லை. வங்கதேச அணிக்கு எதிராக கவுரவ வெற்றிக்காக போராடுவோம். வங்கதேச அணிக்கு எதிராக தோல்வி அடையாமல் நம்பிக்கையுடன் ஆடி வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அக்தர் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close