[X] Close

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா? வாய்ப்புகள் என்ன?


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 12:28 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் அணியால் உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா, அதற்கான சாத்தியங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியாவும், 2-வது அணியாக இந்தியாவும் தகுதி பெற்றிருந்தன.

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்த்து மோதியது இங்கிலாந்து அணி. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி. இதன் மூலம் 12 புள்ளிகளுடன் 3-வது அணியாக அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது.

sar.jpg 

தற்போது 9 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் +0.175 ரன் ரேட்டில் நியூஸிலாந்து அணி 4-வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி தற்போது 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு ஆட்டம் மட்டும் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தை வென்றால் நியூஸிலாந்துக்கு இணையாக 5 வெற்றிகள் 11 புள்ளிகளைப் பெறும். லீக் சுற்றிலும் நியூஸிலாந்து அணியை பாகிஸ்தான் வென்றதால், அந்த சலுகை புள்ளியும் கிடைக்கும்.

ஆனால், வங்கதேச அணியை எத்தகைய ரன் ரேட்டில் வெல்வதில்தான் சிக்கல் நிலவி வருகிறது. தற்போது நியூஸிலாந்து அணி +0.175 ரன் ரேட்டில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியோ -0.792 ரன் ரேட்டில் இருக்கிறது. நியூஸிலாந்தின் ரன் ரேட்டை முறியடிப்பது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சவாலாகும்.

அதாவது வங்கதேசம் அணியை 308 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி ரன் ரேட்டை அதிகமாகப் பெற்று அரையிறுதிக்குள் செல்ல முடியும்.

கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் வெற்றியை நியூஸிலாந்து மட்டுமே வைத்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகளுக்கு 402 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து அணி 112 ரன்களில் அயர்லாந்து அணியைச் சுருட்டி 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுதான் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். ஒருவேளை வங்கதேசத்தை 308 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் அது உலக சாதனையாக மாறும்.

sarfraz-a.jpg 

பாகிஸ்தான் தகுதி பெற செய்ய வேண்டியவை

* பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 308 ரன்கள் சேர்த்து, வங்கதேசம் அணியை 0 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். 308 ரன்களுக்குள் குறைந்தால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாது.

* பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 350 ரன்கள் சேர்த்து, 312 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெல்ல வேண்டும்.

* பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 400 ரன்கள் சேர்த்து, 316 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லலாம்.

* டாஸில் தோல்வி அடைந்து முதலில் பீல்டிங் செய்தாலே அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

* பாகிஸ்தான் அணி டாஸ் வெல்ல வேண்டும், முதலில் பேட்டிங் செய்து இந்த ரன்களை அடித்தால் மட்டுமே சாத்தியம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close