[X] Close

இறுதி ஓவர்களில் கிடுக்கிப்பிடி பவுலிங் திறமை எப்படி வந்தது? - பும்ராவின் விளக்கம்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 14:59 pm
  • அ+ அ-

-ஸ்போர்ட்ஸ்டார்

பேட்ஸ்மென் எந்த நிலையில் இருந்தாலும் பும்ரா பந்து வீச வந்தால் ஒன்று அதிவேக பவுன்சர் இல்லையேல் ஒரு பாதம் பெயர்க்கும் யார்க்கர் என்று உலக பேட்ஸ்மென்களை அச்சுறுத்தி வைத்துள்ளார் ஜஸ்ப்ரித் பும்ரா.

 

அனைத்துப் போட்டிகளிலுமே பும்ராவை மட்டுமே ஒன்றும் செய்ய முடியவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் அபாரம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஏறக்குறைய விளையாட முடியாத ஒரு பவுலராக இருந்தார் பும்ரா.

 

இந்நிலையில் தன் இறுதி ஒவர்கள் கிடுக்கிப் பிடி பவுலிங் திறமைகள் குறித்து அவர் கூறியதாவது:

 

யார்க்கரைப் பொறுத்த அளவில் அனைத்தும் தயாரிப்புதான். வலையில் அதிகம் வீசி வீசிப் பழக வேண்டும். அதையே மேட்சிலும் வீசிப் பார்க்க வேண்டும். பயிற்சியில் அனைத்தும் சரியாக அமைந்து விட்டது என்றால் மேட்சில் நேரடியாக இறக்க வேண்டியதுதான்.

 

பிட்ச் மந்தமாக ஆகும் என்பதால் புதிய பந்தில் நிச்சயம் ரன்கள் குவிக்கப் பார்ப்பார்கள், அதனால்தான் விரைவில் பந்தை பழசாக்கினால் ஸ்ட்ரோக் ஆட முடியாது. பந்து பழசாகிவிட்டால் மெதுவாகவே வரும். கோடை வரும் போது பிட்ச்கள் வறண்டு விடும்.

 

டெத் பவுலிங் என்பது நாம் புத்தியளவில் தெளிவாக இருப்பதாகும். நான் பந்து வீசும் போது நான் எடுக்கும் முடிவுக்குத்தான் வீசுவேன். நானே கேப்டனிடம் கூறுவேன் இதைத்தான் செய்யப் போகிறேன், இது என்னால் முடியும் என்பேன். ஐபிஎல் போட்டிகள் டி20யாக இருந்தாலும் சில போட்டிகள் அதிநெருக்கடிப் போட்டிகளாகவே அமையும் அதில் ஆடியிருப்பது இத்தகைய தருணங்களுக்கு என்னை சர்வதேச போட்டிகளுக்கும் தயார்படுத்துகிறது.அணியின் இலக்கு என்னவோ அதற்கு ஏற்ப வீச வேண்டியதுதான்.

 

இது எனது முதல் உலகக்கோப்பை ஆகவே நான் அதிகப் போட்டிகளில் ஆட வேண்டும்.  இடைவெளி தேவைப்படும் அளவுக்கு நான் ஒன்றும் அனுபவசாலியில்லையே.

 

இவ்வாறு கூறினார் பும்ரா.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close