[X] Close

அம்பதி ராயுடு ஓய்வு அறிவிக்க அணியின் தேர்வாளர்களை காரணம்: கவுதம் கம்பீர் ஆவேசம்


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 17:05 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

அம்பதி ராயுடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்க இந்திய அணியின் தேர்வுக்குழுவினரே காரணம் என்று பாஜக எம்.பியும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவித்தபோது, நடுவரிசைக்கு தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என 3 வகையான பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வுக் குழுத்தலைவர் பிரசாத் தெரிவித்தார்.

அதேசமயம், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இந்திய அணியில் 4-வது இடத்துக்கு சரியான வீரர் அம்பதி ராயுடுதான் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்து வந்தார். இதனால், உலகக்கோப்பைக்கான அணியில் அம்பதி ராயுடுவுக்கு இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது ஆனால், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதால் அம்பதி ராயுடு கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும் ரிசர்வ் வீரராக ராயுடுவை பிசிசிஐ வைத்திருந்தது விஜய் சங்கரை மறைமுகமாக விமர்சித்து, அம்பதி ராயுடு டிவிட்டரில் கருத்து தெரிவிதிருந்தார்.

இதற்கிடையே சமீபத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் காயமடைந்த ஷிகர் தவணுக்கு பதிலாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார்.

RAYUDU.jpg 

விஜய் சங்கருக்கு பதிலாக ரிசர்வ் வீரராக இருக்கும் தன்னைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டார். இதனால், இந்த முறையும் தனக்கு இருந்த வாய்ப்பு பறிபோய்விட்டதாக அம்பதி ராயுடு மிகவும் வேதனையுடன் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த சூழலில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக இன்று அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். 

அம்பதி ராயுடுவின் ஓய்வு குறித்து கவுதம் கம்பீர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், " அம்பதி ராயுடு இளம் வயதிலேயே ஓய்வு அறிவிக்க எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினர்தான் காரணம். தேர்வுக்குழுவில் உள்ள 5 உறுப்பினர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்த ரன்கள் மொத்தத்தையும் சேர்த்தாலே, அம்பதி ராயுடு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்த ரன்னுக்கு ஈடு செய்ய முடியாது.

தேர்வுக்குழுவினரின் முடிவு எடுக்கத்தெரியாமல் போனதால்தான் ராயுடு தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தேர்வுக்குழுவினரின் முடிவு எனக்கு இந்த உலகக் கோப்பையில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராயுடுவின் ஓய்வு அறிவிப்பு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சில வீரர்கள் காயம் அடைந்தவுடன் அவர்களுக்கு பதிலாக ரிஷப் பந்த், மயங்க் அகர்வாலை தேர்வு செய்தவர்கள், ராயுடு மனநிலையில் இருந்து சிந்தித்தால் மோசமாக இருந்திருக்கும். ராயுடுவின் ஓய்வு இந்திய கிரிக்கெட்டின் சோகமான நிகழ்வு.

அம்பதி ராயுடு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததவர், தேசத்துக்காகவும் இந்திய அணியில் இடம் பெற்ரஉ 3 சதங்கள், 10 அரைசதங்கள் அடித்துள்ளார். இதுபோன்ற இளம், உற்சாகம்மிகுந்த வீரர் ஓய்வு பெறுவது இந்திய கிரிக்கெட்டின் சோகம் " எனத் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close