[X] Close

எங்களை விட பிரேசில் சிறந்த அணி அல்ல, ரெஃப்ரி விளையாடி விட்டார்: லியோனல் மெஸ்ஸி ஆவேசம்


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 16:32 pm
  • அ+ அ-

கோப்பா அமெரிக்கா கால்பந்து அரையிறுதிப் போட்டியில் பிரேசிலிடம் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி தோற்று வெளியேறியது, இந்தப் போட்டியில் நடுவர் செயல்பாடு ஒருதலைபட்சமானதாக இருந்ததாக அர்ஜெண்டினா மேலாளர் மற்றும் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் கடும் குற்றச்சாட்டை வைத்தனர்.

 

மெஸ்ஸியின் பிரதானக் குற்றச்சாட்டு என்னவெனில் ஈக்வடார் நடுவர் ராடி ஸாம்ப்ரானோ பிரேசில் 2வது கோல் அடிப்பதற்கு சற்று முன்னர் அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி வழங்காததே என்பதுதான். ஆனால் இது மெஸ்ஸியின் பல புகார்களில் ஒன்றுதான்.

 

“எங்களை விட பிரேசில் சிறந்த அணி அல்ல. முன்னதாகவே அவர்கள் கோல் அடித்து விட்டனர். ஆனால் 2வது கோலுக்கு முன்னர் எங்களுக்கு பெனால்டி வழங்கத் தவறினார் நடுவர். ரெஃப்ரியிங் இந்த ஆட்டத்தில் பித்துப் பிடித்தது போல் இருந்தது.

 

எங்கள் அணி வீரர்களான நிகோலஸ் ஒடாமெண்டி மற்றும் அகுயெரோ ஆகியோர் சார்பாக பெனால்டி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ரெஃப்ரி அவர்கள் பக்கம் ஆடினார். இது தோற்றதற்கான சாக்குப் போக்கு அல்ல, நிச்சயமான உண்மை. இந்த கோப்பா அமெரிக்கா போட்டிகள் முழுதும் நடுவர்கள் முட்டாள் தனமாக வீடியோ முறையீடு செய்தனர். பெனால்டிகள் வழங்கினர், ஆனால் இந்த ஆட்டத்தில் அவர்கள் வீடியோ சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கவேயில்லை.

 

ஆனால் பல தருணங்கள் அவர்கள் அதைச் சரிபார்க்க வேண்டிய தருணங்கள் இந்த ஆட்டத்தில் நிகழ்ந்தன.

 

இந்த கோப்பா அமெரிக்காவில் இதுதான் நாங்கள் விளையாடிய சிறந்த மேட்ச். பிரேசில் அணியில் பிரமாதமான சில வீரர்கள் ஆடினர். அர்ஜெண்டினா வீரர்கள் தியாகங்கள் பல செய்துள்ளனர், அவர்கள் மதிக்கப்பட வேண்டும். அணி மேலும் மேலும் முன்னேற நிறைய திறமைகள் இன்னும் இருக்கிறது” என்று சாடினார்.

 

பிரேசிலின் டேனி அல்வேஸ்,  “அர்ஜெண்டினா ஒரு கடினமான எதிரணி. நாங்கள் காட்டுமிராண்டித் தனமான முயற்சி எடுத்தால்தான் வெற்றி என்பதில் தெளிவாக இருந்தோம். தொடக்கத்திலிருந்தே எதை நோக்கி ஆடினோமோ அது நடந்தது, ஆனால் எங்களுக்குத் தெரியும் இது சுலபமல்ல என்பது. பலரும் எங்களை சந்தேகித்தனர், ஆனால் நாங்கள் எங்கள் ஆட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தோம்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close