[X] Close

அரை இறுதிக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து - நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 08:44 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துர்ஹாம் நகரில் உள்ள செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸி லாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டம் என்பதால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எளிதாக அரை இறுதிக்கு முன்னேறும்.

சாம்பியன் பட்டம் வெல்லக் கூடிய அணிகளுள் ஒன்றாக சித்த ரிக்கப்பட்டு வந்த மோர்கன் தலை மையிலான இங்கிலாந்து அணி இலங்கை, ஆஸ்திரேலியா அணி களிடம் அடுத்தடுத்து தோல்வி களை சந்தித்து கடும் விமர்சனங் களை எதிர்கொண்டது. எனினும் கடைசியாக பங்கேற்ற ஆட்டத்தில் இந்திய அணியை 31 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியதன் மூலம் அரை இறுதிக்கு முன்னேறுவதற் கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது இங்கிலாந்து அணி.

8 ஆட்டங்களில் விளையாடி உள்ள இங்கிலாந்து அணி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளி கள் பெற்று பட்டியலில் 4-வது இடத் தில் உள்ளது. இந்தியாவுக்கு எதி ரான ஆட்டத்தில் அனைத்து துறை யிலும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தியிருந்தனர் இங்கி லாந்து அணி வீரர்கள்.

தொடக்க வீரர்களான ஜேசன் ராய் (66), ஜானி பேர்ஸ்டோ (111) ஜோடி இந்திய பந்து வீச்சில் ரன் வேட்டையாடியிருந்தது. ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸும் 79 ரன்களை விளாசியிருந்தார். இவர் களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

இதேபோல் இந்திய அணிக்கு எதிராக லியாம் பிளங்கெட் 3 முக் கிய விக்கெட்களை வீழ்த்தி அணி யின் வெற்றிக்கு சிறந்த பங் களிப்பு செய்திருந்தார். இன்றைய ஆட்டத்தில் அவர், நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கள் தரக்கூடும்.

கேன் வில்லியம்சன் தலைமையி லான நியூஸிலாந்து அணி 8 ஆட்டங் களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என 11 புள்ளிளுடன் பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. கடைசியாக மோதிய இரு ஆட்டங்களிலும் நியூ ஸிலாந்து தோல்விகளை சந்தித் தது. இந்த இரு ஆட்டங்களிலும் நியூஸிலாந்து அணியின் பேட்டிங் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 238 ரன்கள் இலக்கையே கொடுத்த நியூஸிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 244 ரன்களை துரத்திய போது 157 ரன்களில் சுருண்டிருந்தது. அணியின் பேட் டிங் வில்லியம்சனை மட்டுமே சார்ந்திருப்பது பலவீனமாக கருதப் படுகிறது.

தொடக்க வீரரான மார்ட்டின் கப்தில் ரன்கள் சேர்க்க திணறுவது அணியின் செயல்திறனை வெகு வாக பாதித்துள்ளது. மற்றொரு தொடக்க வீரரான காலின் மன் றோவுக்கு மாற்றாக களமிறக்கப் பட்ட ஹென்றி நிக்கோல்ஸிடம் இருந்தும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை. ராஸ் டெய்லர், டாம் லேதம் ஆகியோரிடம் இருந்து வெற்றிக்கான பங்களிப்பு இல்லாதது அணியின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இங்கிலாந்து அணியின் வலு வான பந்து வீச்சுக்கு எதிராக நியூஸிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்த செயல் திறனை வெளிப்படுத்தி னால் மட்டுமே பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க முடியும். பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு இடது கை வேகப் பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். அவருக்கு உறுது ணையாக லூக்கி பெர்குசனும் சிறப்பாக வீசி வருகிறார். இந்த கூட்டணி, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் தர முயற்சிக்கக்கூடும்.

Capture.JPG 

பாகிஸ்தான் தலைவிதி இன்று தெரியும்?

நியூஸிலாந்துக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகக் கூடும். இங்கிலாந்து அணி தோற்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் 11 புள்ளிகளுடன் அரை இறுதி வாய்ப்பை எட்டிப்பிடித்து விடும்.

மாறாக நியூஸிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படக் கூடும். இது நிகழ்ந்தால் பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில் நியூஸிலாந் தும், பாகிஸ்தானும் தலா 11 புள்ளிகளை பெறும். இந்த சூழ் நிலை ஏற்பட்டால் அரை இறுதிக்கு முன்னேறும் அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close