[X] Close

மட்டை உள்விளிம்பில் பட்டதற்கு அப்பீல் கேட்டு ரிவியூவை இழந்த விராட் கோலி: தோனி அப்போது கீப்பிங்கில் இல்லை


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 21:34 pm
  • அ+ அ-

315 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டி வரும் வங்கதேச அணி, இந்திய அணியின் கிடுக்கிப்பிடி பந்து வீச்சில் 24 ஓவர்களில் 125/3 என்று சென்று கொண்டிருக்கிறது.

 

ஷாகிப் அல் ஹசன் 48 பந்துகளில் 41 ரன்களுடனும் லிட்டன் தாஸ் 2 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

 

தொடக்க வீரர் தமிம் இக்பால் 22 ரன்களில் 3 பவுண்டரிகளுடன் ஆடி வந்த நிலையில் ஷமியின் ஃபுல் லெந்த் பந்தில் பிளேய்ட் ஆன் ஆகி வெளியேறினார்.

 

சவுமியா சர்க்காரும் (33), ஷாகிப் அல் ஹசனும் ஸ்கோரை 74 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். இடையில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. இன்னிங்சின் 13வது ஓவரை ஷமி வீசினார். சவுமியா சர்க்கார் முதல் பந்தை பிரமாதமாக ஆஃப் திசையில் பவுண்டரிக்கு அனுப்பினார். இந்த ஓவருக்கு முன் தோனி பெவிலியன் சென்றார் ரிஷப் பந்த் கீப்பிங் செய்தார்.

 

ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய ஷமி அடுத்த பந்தை உள்ளே செலுத்த கால்காப்பில் வாங்கினார் சவுமியா, மிகப்பெரிய அப்பீல், ஷமி கிட்டத்தட்ட நடுவருக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்தார்.  ஆனால் நாட் அவுட், ஏனெனில் லைவில் அது லெக் ஸ்டம்பை மிஸ் செய்தது போல் தெரிந்தது.

 

கோலி ரிவியூ கேட்டார், அப்போது தோனி இல்லை. ரிவியூவில் பந்து மட்டை, கால்காப்பு இரண்டிலும் பட்டது போல் தெரிய இன்சைடு எட்ஜ் என்ற அளவில் களநடுவர் நாட் அவுட் தீர்ப்பு ஏற்கப்பட்டு நாட் அவுட் என்று மூன்றாம் நடுவர் அலீம் தார் முடிவெடுத்தார், இன்சைடு எட்ஜ் என்பதால் ரிவியூவும் இந்தியாவுக்குக் காலியானது.

 

இன்சைட் எட்ஜ் என்பதால் பந்து செல்லும் வழித்தடத்தையும் சரிபார்க்கவில்லை, அது நாட் அவுட்.  எல்.பி.அப்பீல் அம்பயர்ஸ் கால் என்று முடிந்திருந்தால் ரிவியூ போயிருக்காது, ஆனால் எட்ஜ் என்பதால் ரிவியூ காலியானது.

 

ஆனால் கோலி நடுவர் இராஸ்மஸிடம் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதனால் ஒழுங்கு நடவடிக்கை வந்தாலும் பரவாயில்லை, நாட்டுக்காக ஆடும்போது அந்தத் தருணத்தின் உணர்வுக்கு நேர்மையாக நடந்து கொண்டு அவர் நடுவரிடம் வாக்குவாதம் புரிந்து தெளிவுபெற்றார்.

 

ஆனால் சவுமியா சர்க்கார் அதன் பிறகு 11 ரன்கள் கூடுதலாகச் சேர்த்து 37 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து பாண்டியாவின்  ‘அருமை’யான ஷார்ட் பிட்ச் பந்தை நேராக கோலி கையில் ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் அடித்து கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

ஆனால் அவர் அவுட் ஆன பிறகும் நடுவரை கேலி செய்யும் விதமாக கோலி ஒரு விரலை உயர்த்தி அவுட் என்பது போல் செய்கை செய்தார். கிரிக்கெட்டை ஒரு பற்றுதலுடனும் நேயத்துடனும் ஒரு வீரராக களத்தில் ஆடும்போது இப்படிப்பட்ட ஜாலியெல்லாம் சகஜம்தான். நடுவர்களும் அதை சிரித்தபடியே ஏற்றுக் கொண்டனர். ஆனால் தோனி இல்லாத நிலையில் தவறாக ரிவியூ கேட்டு இருந்த ஒரு ரிவியூவையும் இழந்துள்ளது இந்திய அணி என்பதுதான் விஷயம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close