[X] Close

39 போட்டிகள் முடிந்தும் அரையிறுதியை உறுதி செய்த ஒரு அணி ஆஸி.: மற்ற அணிகளின் வாய்ப்புகள் எப்படி?


39

  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 17:25 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியா மட்டுமே நடப்பு உலகக்கோப்பையில் அரையிறுதியை உறுதி செய்த ஒரே அணியாக இருந்து வருகிறது. இங்கிலாந்து 3  போட்டிகளில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை திறந்து விட இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று சமன்பாட்டை மாற்றிப் போட்டுள்ளது. ‘

 

இந்நிலையில் வாய்ப்புகள் பற்றி பார்ப்போம்:

 

அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணி: ஆஸ்திரேலியா.

 

வெளியேறிய அணிகள்: தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை

 

இங்கிலாந்துடன் தோற்றதால் இந்திய அரையிறுதி வாய்ப்பில் எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. இன்று வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தினாலோ அல்லது இலங்கையை வீழ்த்தினாலோ அரையிறுதி உறுதி.

 

சரி இந்திய அணி இந்த 2 போட்டிகளில் தோல்வியடைந்தாலுமே அரையிறுதிக்குத் தகுதி பெறுவது ஏறக்குறைய உறுதிதான், ஏனெனில் இந்திய அணியின் நிகர ரன் விகிதம் பாகிஸ்தான், வங்கதேசத்தைக் காட்டிலும் அதிகமாக, சிறிது தொலைவில் உள்ளது. அன்று இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி உறுதி என்றான பிறகு தோனி ஆடிய இன்னிங்ஸ் இந்த நிகர ரன் விகிதத்தை உயர்த்தவே என்ற ஒரு கோட்பாடு கிரிக்கெட் வட்டாரங்களில் சுழன்று கொண்டிருக்கிறது.

 

இந்தச் சூழ்நிலையிலும் இங்கிலாந்து நியூஸிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவை ஓவர்டேக் செய்ய முடியும்.

 

நியூசிலாந்து அணி 11 புள்ளிகள்  நிகர ரன் விகிதம் +0.572. :

 

இங்கிலாந்துடன் இந்திய அணி வென்றிருந்தால் நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். இது நடக்காவிட்டாலும் நியூஸிலாந்து அரையிறுதி வாய்ப்பில் வசதியான இடத்தில்தான் உள்ளது. இங்கிலாந்தை நியூஸிலாந்து வீழ்த்திவிட்டால் அதன் அரையிறுதி உறுதியாகிவிடும்.

 

ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற்று விட்டால், பாகிஸ்தானிடமோ, வங்கதேசத்திடமோ அரைஇறுதி வாய்ப்பி நியூசிலாந்து இழக்கும் அரிதான ஒரு வாய்ப்பும் உள்ளது.

 

 

ஆனாலும் பாகிஸ்தான், வங்கதேச அணிகளை ஒப்பிடும்போது நியூஸிலாந்தின் ரன் விகிதம் மிக மிக வலுவான நிலையில் உள்ளது.

 

 

இங்கிலாந்து 10 புள்ளிகளுடன் 4ம் இடம்:

 

இங்கிலாந்தைப் பொறுத்தவரை சமன்பாடு மிகவும் எளிதானது, நியூஸிலாந்தை வீழ்த்தி நேரடியாக குழப்பமில்லாமல் அரையிறுதிக்குச் செல்ல வேண்டியதுதான். ஆனால் நியூஸிலாந்துக்கு எதிராக தோற்றால் பாக். அல்லது வங்கதேசம் இங்கிலாந்தை ஓவர்டேக் செய்ய வாய்ப்புள்ளது.

 

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் 11 புள்ளிகள் பெறும். இங்கிலாந்தின் 10 புள்ளிகளுக்கு ஒரு புள்ளி கூடுதல் பெறும்.

 

வங்கதேச அணி இந்தியாவையும் பாகிஸ்தானையும் தோற்கடித்து விட்டால் 11 புள்ளிகள் பெற்று இங்கிலாந்தை வெளியேற்றி விடும்.

 

பாகிஸ்தான் வாய்ப்பு எப்படி?

 

தற்போது பாகிஸ்தான் 5ம் இடத்தில் 9 புள்ளிகளுடன் நிகர ரன் விகிதம் மைனஸ் 0.792 என்று உள்ளது.

 

வங்கதேசத்தை பாகிஸ்தான் அணி வீழ்த்த வேண்டும் அதே வேளையில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். ஆனால் பாகிஸ்தான்  மிகப்பெரிய மார்ஜினில் வெற்றி பெற வேண்டும்.

 

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போகும் வாய்ப்பும் உள்ளது எப்படி?

 

இந்தியா இன்று வங்கதேசத்துடனும், இலங்கைக்கு எதிராகவும் தோற்றுவிட்டால், இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை வீழ்த்திவிட்டால் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி விட்டால் இந்திய அணி பாகிஸ்தானுக்குக் கீழ் 5ம் இடத்திற்கு சரியும். இந்திய அணியின் நடப்பு ரன் விகிதம் +0.854. ஆனால் பாகிஸ்தான் நெட் ரன் ரேட் மைனஸ் 0.792.

 

வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளை வெல்ல வேண்டும். அப்போது நியூஸிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து தோற்க வங்கதேசம் பிரார்த்திக்க வேண்டும். இதனால் இங்கிலாந்து 10 புள்ளிகளில் தேங்கும். வங்கதேசம் இரு வெற்றிகளுடன் 11 புள்ளிகளுக்கு உயரும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close