[X] Close

தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வாய்ப்பு; இரு மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி:  டாஸ் வென்று பேட்டிங்;ஆடுகளம் எப்படி?


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 14:56 pm
  • அ+ அ-

எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியின் வங்கதேச அணிக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

வங்கதேசம் அணி இதுவரை 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி 7 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான இந்த ஆட்டத்திலும், அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் வென்றால் அரையிறுதிக்கு வாய்ப்பு உண்டு.

ஆனால், இங்கிலாந்து அணி, நியூஸிலாந்து அணியிடம் தோற்றால் மட்டுமே வங்கதேசம் அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு உண்டு. ஆதலால், இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் சென்றாலும், பாதுகாப்பான இடத்தைப் பெற இன்னும் ஒரு வெற்றி அவசியம்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த அதே மைதானத்தில்தான் இன்றைய ஆட்டமும் நடக்கிறது. முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணி நல்ல ஸ்கோர் செய்தது.

அதனால், டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த போட்டியில் மோசமாக ஆடிய கேதார் ஜாதவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்த குல்தீப் யாதவுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்ட புவனேஷ்வர் குமார் கடந்த 2 போட்டிகளாக களமிறங்கவில்லை. தற்போது குணமடைந்ததால், அவர் களமிறங்கியள்ளார். அதேபோல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இதுவரை கடந்த 7 போட்டிகளாக வாய்ப்பு பெறாமல் இருந்த நிலையில்,முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால், அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேச அணியில் மகமதுல்லா நீக்கப்பட்டு சபீர் ரஹ்மானும், மெஹதி ஹசன் நீக்கப்பட்டு ருபெல் ஹூசைன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆடுகளம் எப்படி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த அதே ஆடுகளம்தான். இந்த ஆடுகளத்தில் அதிகவேகப்பந்து வீச்சு, ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆகியோர் ஜொலிக்க முடியாது. மிதவேகம்த்தில் லெக் கட்டர்கள், இன்ஸ்விங் என பந்துவீச்சில் மாற்றங்களை செய்தால் விக்கெட் வீழ்த்தலாம். சுழற்பந்துவீ்ச்சில் விரலில் சுழற்றி வீசுபவர்களுக்கு சாதகமாக இருக்கும் முதலில் பேட் செய்து என்ன ஸ்கோர் அடித்தாலும், சேஸிங்கும் செய்ய முடியும். இடதுபுறம் பவுண்டரி தொலைவு மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், ஆஃப்சைடில் பவுண்டரி அடிப்பதைக் காட்டிலும், லெக் சைடில் பவுண்டரி அடிப்பது எளிது

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close