[X] Close

அணியின் முழு முயற்சியால் வெற்றி: பாக். கேப்டன் சர்பிராஸ் கருத்து


  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 07:59 am
  • அ+ அ-

அணியின் முழு முயற்சியால் உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறினார்.

இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கோப்பையின் அரைஇறுதி வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

வெற்றி குறித்து சர்பிராஸ் அகமது கூறும்போது, “இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் அரை இறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளோம். பாபர் ஆசம், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

கடைசி நேரத்தில் இமாத் வாசிம் அபாரமாக விளையாடினார். கடும் நெருக்கடியில் இறங்கி ஆட்டமிழக்காமல் அவர் குவித்த 49 ரன்கள் சிறப்பானவை. ஒட்டுமொத்தத்தில் அணியின் முழு முயற்சியால் கிடைத்த வெற்றிஇது. கடைசி போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளோம். அந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close