[X] Close

இலங்கை அணிக்கு இன்று வாழ்வா சாவா ஆட்டம்: மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மோதல்


  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 07:56 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத் தில் இன்று இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மோதவுள்ளது.

இந்த ஆட்டம் செஸ்டல் லீ ஸ்டிரீட் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இலங்கை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளை யாடி 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 3 தோல்விகளைக் கண்டுள்ளது. 2 ஆட்டங் கள் மழையால் தடைபட்டதால் கிடைத்த புள்ளிகளுடன் மொத்தம் 6 புள்ளிகளை அந்த அணி பெற்று புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. இந்த 2 ஆட்டங்களில் வென்றால் மட்டுமே அந்த அணி தனது அரை இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். எனவே இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா சாவா ஆட்டம் போன்றதாகும். எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இலங்கை வீரர்கள் முழு முயற்சி மேற்கொள்வர்.

இலங்கை அணி, பேட்டிங்கில் கேப்டன் திமுத் கருணாரத்னே, அவிஷ்கா பெர் னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் பெரேரா, திசரா பெரேரா, திரிமன்னே ஆகி யோரை நம்பியுள்ளது. பவுலிங்கில் மலிங்கா, இசுரு உதானா, லக்மல், தனஞ்செய டி சில்வா, ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக உள்ளனர்.

அதே நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, போட்டியிலிருந்து வெளியேறிவிட் டது. இதுவரை 7 போட்டிகளில் விளையா டியுள்ள அந்த அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி மழையால் தடைபட்டும் போனது. எனவே அந்த அணிக்கு இது ஒரு சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும்.

அணி விவரம்:

இலங்கை: திமுத் கருணாரத்னே, தனஞ்செய டி சில்வா, கசுன் ரஜிதா, அவிஷ்கா பெர்னாண்டோ, சுரங்கா லக்மல், லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ், ஜீவன் மெண்டிஸ், குசல் பெரேரா, திசரா பெரேரா, மிலிந்தா சிறிவர்த்தனா, லஹிரு திரிமன்னே, இசுரு உதானா, ஜெப்ரே வான்டர்சே.

மேற்கிந்தியத் தீவுகள்: ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், சிம்ரன் ஹெட்மயர், கார்லோஸ் பிராத்வெயிட், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ், கெமார் ரோச், ஆஷ்லி நர்ஸ், நிக்கோலஸ் பூரன், சுனில் அம்பரிஸ், ஷன்னான் கேப்ரியேல், டேரன் பிராவோ, பேபியன் ஆலன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close