[X] Close

உஸ்மான் கவாஜாவை பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் 3ம் நிலையில் இறங்க வேண்டும்: இயன் சாப்பல் பரிந்துரை


3

  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 19:01 pm
  • அ+ அ-

2019ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளில் பெரும் பங்கு வகித்ததோடு, அதிக ஸ்கோர்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கிறார் உஸ்மான் கவாஜா, நேற்று கூட நியூஸிலாந்துக்கு எதிராக அவர் ஒருமுனையைத் தாங்கி 88 ரன்களை எடுக்க விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 72 பந்துகளில் 71 ரன்களை விளாச ஆஸ்திரேலியா 243 ரன்களை எட்டியது, இவர்களது 107 ரன்கள் கூட்டணி இல்லை என்றால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 150-160 ரன்களுக்கு முடங்கி தோல்வி கூட ஏற்பட்டிருக்கும்.

 

2019 உலகக்கோப்பையில் இதுவரை 298 ரன்களை 37.25 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இரண்டு அரைசதங்கள்.

 

இந்நிலையில் தொடர்ந்து கவாஜாவை இலக்காக்கி வருகிறது ஆஸி அணி நிர்வாகமும் முன்னாள் வீரர்களும்.

 

முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கவாஜா பற்றி கூறியதாவது:

 

இப்போது கவாஜாவை அவர்கள் விட்டு விட முடியாது. அவர் தொடக்கத்தில் களமிறங்கவில்லையெனில் நான் அவரை அணியில் வைத்திருக்க மாட்டேன். ஸ்மித் 3ம் நிலையில் இறங்க வேண்டும், ஆனால் கவாஜாவை இனி தவிர்க்க முடியாது.

 

ஒருநாள் கிரிக்கெட் தொடங்கிய முதல் நாளிலிருந்தே சதமெடுக்கும் மூன்று வீரர்கள் முன்னணியில் தேவை. அந்த மாதிரி சதமெடுக்கும் 3 வீரர்களைத் தேர்வு செய்வது அவசியம்.

 

நான் 3ம் நிலையில்தான் இறங்குவேன், என்னை விட குறைவாகப் பேட் செய்யும் திறமை கொண்டவர்களை நான் எனக்கு முன்னால் இறங்க அனுமதிக்க மாட்டேன்.

 

நான் ஸ்டீவ் ஸ்மித்தாக இருந்திருந்தால். நான் நிச்சயமாக ‘நண்பர்களே எனக்கு 3ம் நிலை வேண்டும்’ என்று கேட்டுப்பெறுவேன்.  எனவே ஸ்டீவ் ஸ்மித், கவாஜாவை பின்னுக்குத் தள்ளி 3ம் நிலையில் இறங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

 

இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close