[X] Close

பாகிஸ்தான் உங்களுடன் நிற்கும்- துணிச்சலாக விளையாடுங்கள்: இந்தியாவுக்கு ஷோயப் அக்தர் ஆதரவு


  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 17:39 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் இங்கிலாந்துடன் துணிச்சலாக ஆடுங்கள் என்று இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர்.

உலகக் கோப்பைப் போட்டி மிகவும் பரபரப்பான  கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டநிலையில், அடுத்த 3 இடங்களுக்கான போட்டி கடுமையாக இருந்து வருகிறது. இந்திய அணியும், நியூஸிலாந்து அணியும் தலா 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளார்கள். இரு அணிகளும அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல் இருக்காது.

ஆனால், 4-வது இடத்துக்குயார் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து அணி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்துவரும் இரு போட்டிகளையும் வெல்ல வேண்டியது கட்டாயமாகும். அதேபோல, பாகிஸ்தான் 9 புள்ளிகளுடன் இருக்கிறது அடுத்து வரக்கூடிய இரு ஆட்டங்களையும் அந்த அணியும் வென்றால், அரையிறுதிக்குச் செல்லும்.

kohli.jpg 

இந்த இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிவரும் இந்திய அணிக்கு பாகிஸ்தான முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்தில் மட்டுமல்ல வெளிநாடுகளில் எங்கு வசிக்கும் அனைத்து பாகிஸ்தானிய மக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களுக்கு யார் விருப்பமானவர்களோ, யார் சரியான அணி என்று  நினைக்கிறார்களோ அது இந்தியா, அல்லது இங்கிலாந்து எதுவாகட்டும் அதற்கு ஆதரவு தாருங்கள்

ஆனால் மற்றொரு வாய்ப்பும் இருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டின் தண்ணீரைக் குடித்துள்ளீர்கள் , அந்நாட்டை அடிப்படையாக வைத்து உழைத்து சம்பாத்தித்துள்ளீர்கள், சாப்பிட்டுள்ளீர்கள். ஆதலால், அவர்களை ஆதரிப்பதுதான்சரி.

ஆனால், பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் மக்கள், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறினால், பாகிஸ்தான் வங்கதேசத்துக்கு எதிராக வென்றால், நமக்குவாய்ப்பு இருக்கிறது.

அரையிறுதியில் இந்திய அணியும், பாகிஸ்தானும் மோதுவதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஆதலால், சமூக ஊடகங்களில் உள்ள அனைத்து பாகிஸ்தானிய மக்களும், இந்திய அணிக்கு ஆதரவு தாருங்கள். இங்கிலாந்து தோற்பதுநமக்கு அவசியம். ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆதலால், இந்திய அணி  துணிச்சலாக விளையாடுங்கள்.

புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு வந்து பாகிஸ்தான் அணி 4-வு இடம் பிடித்தால், அரையிறுதியில் இரு அணிகளும் மோதும். இந்தபோட்டியை காண வேண்டும். உலகமே மீண்டும் அந்த போட்டியைக் காண ஆவலாக இருக்கிறார்கள். இந்தியாவுடன் அரையிறுதியில் மோதினால் பாகிஸ்தான் அணி மகிழ்ச்சி அடைவார்கள். நாங்களும் இறுதிப்போட்டிக்கு செல்வோம்

இவ்வாறு அக்தர் தெரிவித்துள்ளார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close