[X] Close

புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் தோனி, கோலி


  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 15:48 pm
  • அ+ அ-

எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தோனியும், கோலியும் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கின்றனர்.

உலகக்கோப்பைப் போட்டி தொடங்கியதில் இருந்து இந்திய அணி ஆடிய 6 ஆட்டங்களில் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 72, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 67, பாகிஸ்தானுக்கு எதிராக 77, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 என கோலி ஸ்கோர் செய்துள்ளார்.

விராட் கோலி தவிர்த்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், வங்கதேச  வீரர் சகிப் அல் ஹசன் ஆகியோர் இதுபோன்று உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்துள்ளார்கள்.

இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக மற்றொரு அரைசதம் அடித்தால், ஸ்டீவ் ஸ்மித்துடன் கோலி இணைந்துவிடுவார். உலகக் கோப்பைப் போட்டியில் 5 அரைசதங்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் ஸ்மித் மட்டுமே கோலி, 2-வது வீரராக இணைவார்.

அதுமட்டுமல்லாமல், உலகக் கோப்பைப் போட்டியில் இதுபோன்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய கேப்டன் விராட் கோலி என்று பெயரையும் பெறுவார். இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் முகமது அசாருதீன் தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்திருந்தார்.

மேலும், இந்த போட்டியில் விராட் கோலி 97 ரன்கள் சேர்த்தால், உலகக் கோப்பைப் போட்டியில் ஆயிரம் ரன்கள் சேர்த்த 3-வது இந்திய பேட்ஸ்மேன் எனும் பெயரைப் பெறுவார்.

இதற்கு முன் சச்சின்(2,278), சவுரவ் கங்குலி(1,238) ஆகிய இருவர் மட்டுமே இந்த சாதனையைச் செய்திருந்தார்கள். அதற்கு அடுத்தார்போல், விராட் கோலி பெயர் பெறுவார்.

மேலும், 50 எடுத்தால், இங்கிலாந்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ராகுல் திராவிட் அடித்துள்ள ரன்களை கோலி முறியடித்துவிடுவார்.

ராகுல் திராவிட் இங்கிலாந்துக்கு எதிராக 1,238 ரன்கள் சேர்த்துள்ளார். தற்போது கோலி 1189 ரன்கள் சேர்த்துள்ளார்,  இன்னும் 50 ரன்கள் சேர்த்தால், திராவிட்டின் சாதனையை முறியடிப்பார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்  தோனி இன்னும் 20 ரன்கள் சேர்த்தால் யுவராஜ் சிங்கின் சாதனையை  முறியடிப்பார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்களில் யுவராஜ்சிங் 1,523 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். தோனி 1,504 ரன்களில் தற்போது உள்ளார். இன்னும் 20 ரன்கள் சேர்த்தால் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close