[X] Close

இங்கிலாந்து அணி டாஸ் வென்றது: விஜய் சங்கர் இல்லை: ஆடுகளம் எப்படி?


  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 14:55 pm
  • அ+ அ-

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று நடக்கும் இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்ல இன்று இந்தியாவுக்கு எதிராக நடக்கும் ஆட்டத்திலும், அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் வெல்வது கட்டாயமாகும். இதில் ஒரு போட்டியில் தோற்றால்கூட இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் செல்வது கடினம்.ஆதலால் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் வின்ஸ், மொயின் அலிக்கு  பதிலாக ஜேஸன் ராய், பிளங்கெட் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக அணியில் இடம் பெறுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

அதேபோல இந்திய அணியில் ஒருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக  இளம் வீரர் ரிஷப் பந்த் வாய்ப்பு பெற்றுள்ளார். கருநீலம், ஆரஞ்சு வண்ணத்தில் உருவாக்கப்பட்ட புதிய ஆடையில் இந்திய அணி களமிறங்குகிறது.

எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானதாகும். புற்கள் இல்லாமல், தட்டையான ஆடுகளமாக இருப்பதால், முதலில் பேட்செய்யும் அணி நல்ல ஸ்கோர் செய்ய முடியும். 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கும் ஆடுகளம் பேட்டிங்கில் நன்கு ஒத்துழைக்கும் என்பதால், எந்த ஸ்கோரையும் சேஸிங் செய்யும் அளவுக்கு விளையாடலாம். 20 ஓவர்களுக்கு மேல் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close